வேகம்: சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை:காங்., ஆதரவுடன் புதிய அரசு அமைக்க தீவிரம்

புதுடில்லி:லோக்சபா தேர்தல் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்தியில் புதிய அரசு அமைப்பது தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து உள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களை, இது தொடர்பாக நேரில் சந்தித்து பேசிய, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு, தொடர்ந்து இரண்டாவது நாளாக, காங்கிரஸ் தலைவர், ராகுலையும், அவரது தாய் சோனியாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நாட்டின், 17வது லோக்சபாவுக்கான, ஏழாவது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப் பதிவு, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் நேற்று நடந்தது.வரும், 23ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பான விவாதங்கள் துவங்கியுள்ளன.


மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேச தலைவரான, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார்.


சந்திப்பு

காங்., தலைவர், ராகுல்; தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார்; இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், டி.ராஜா, ஜி.சுதாகர் ரெட்டி; லோக்தந்த்ரிக் ஜனதா தளத் தலைவர், சரத் யாதவ் ஆகியோரை, டில்லியில் நேற்று முன் தினம் சந்தித்தார், சந்திரபாபு நாயுடு.அதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம், லக்னோ
சென்ற அவர், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி; சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையி லான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தெலுங்கு தேசம்இடம்பெற்றிருந்தது. மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து, கூட்டணியில் இருந்து வெளியேறினார்.


முயற்சி

தற்போது, பா.ஜ., அல்லாத எதிர்க் கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி; டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி ஆகியோரை, சந்திரபாபு நாயுடு, ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளார்.


இதற்கிடையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவ், பா.ஜ., மற்றும் காங்., அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரையும், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.ஒரு பக்கம், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான, சோனியா, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார்.


கூட்டம்


தேர்தல் முடிவுகள்வெளியானதும், மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, 23ல், டில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கும், சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.பா.ஜ., அல்லாத அரசு அமைப்பதற் கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு, தொடர்ந்து 2 வது நாளாக, காங்., தலைவர், ராகுலை நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர் களுடன் நடத்திய பேச்சுகளின் விபரங்களை, சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


அதைத் தொடர்ந்து, சரத் பவாரையும் அவர் சந்தித்தார்.சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்புக் குப் பின், முன்னாள் பிரதமர், மன்மோகன்சிங், தன் தாய், சோனியா உள்ளிட்ட, காங்., மூத்த தலைவர்களை சந்தித்து, ராகுல் ஆலோசனை நடத்தினார்.


இதைத் தொடர்ந்து, காங்., மூத்த தலைவர் சோனியாவை, அவருடைய இல்லத்தில் நேற்று மாலை, சந்திரபாபு சந்தித்தார். அப்போது, தேர்தல் முடிவுகளுக்குப் பின், புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவர் விவாதித்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் முடிவுகள் வெளியாக மூன்று தினங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.


மாயாவதியும் சந்திப்பு?


உ.பி., முன்னாள் முதல்வரான, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, டில்லியில் சோனியா மற்றும் ராகுலை, இன்று சந்திக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகா கூட்டணி யில் இடம் பெற்றிருந்தாலும், 80 தொகுதிகள் உள்ள, உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாத வின், சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து, பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் காங்.,கை சேர்க்கவில்லை.இந்த நிலையில், சோனியா மற்றும் ராகுலை, அவர் சந்திக்க உள்ளது, தேசிய அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப் படுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)