ம.ஜ.த., கூட்டணியால் ஆபத்து: ராகுலிடம் சித்தராமையா கவலை

பெங்களூரு: 'ம.ஜ.த.,வுடனான கூட்டணியை தொடர்ந்தால், காங்கிரஸ் அடுத்த, 10 ஆண்டுகள், மாநிலத்தின் ஆட்சியை மறக்க வேண்டி வரும்' என, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிடத்திடம் கவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், காங்கிரஸ், ம.ஜ.த., கூட்டணி வைத்துக்கொண்டனவே தவிர, இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை.


தர்மசங்கடம்


வெளியே கை குலுக்கிக் கொண்டும், உள்ளுக்குள் எரிச்சலிலும் ஆட்சியை நடத்திச் செல்கின்றனர்.குறிப்பாக, முதல்வர் பதவியில் குமாரசாமி இருப்பதை, சித்தராமையாவால் சகிக்க முடியவில்லை. ஏனென்றால், சட்ட சபை தேர்தலுக்கு முன், பிரசாரம் செய்த இடங்களில், 'குமாரசாமி அப்பன் மீது
சத்தியமாக, இவர் முதல்வராகமாட்டார்' என, சித்தராமையா விமர்சித்திருந்தார். ஆனால், முதல்வர் பதவியை, தானே முன் வந்து, ம.ஜ.த.,வுக்கு தாரை வார்க்க வேண்டிய சூழ்நிலை, காங்கிரசுக்கு உருவானது.


இதனால், மனம் ஒட்டாமல், கூட்டணியில் நீடிக்கின்றன. சமீப காலமாக, ம.ஜ.த.,தலைவர்கள், 'கூட்டணி வைக்கும்படி, நாங்கள் காங்கிரஸ் கதவை தட்டவில்லை. 'காங்கிரசாரே எங்கள் வீட்டு
வாசலுக்கு வந்தனர்' எனக் கூறுகின்றனர். இவர்களின் இத்தகைய பேச்சு, சித்தராமையாவை கோபப்படுத்தியது.இதுவரை இலைமறைவு, காய்மறைவாக ம.ஜ.த.,வுடன்மோதிய சித்தராமையா, தற்போது நேரடியாகவே களமிறங்கி, அக்கட்சி தலைவர்களை விமர்சிக்க துவங்கி விட்டார்.


தனக்கு நெருக்கமான, எம்.எல்.ஏ.,க்கள் மூலம், 'சித்தராமையா மீண்டும் முதல்வர்' எனக் கூற
வைத்துள்ளார். இதன் காரணமாகவே சித்து ஆதரவாளர்கள், அவ்வப்போது கூட்டணி அரசுக்கு
தர்மசங்கடம் ஏற்படும் வகையில் பேசுவதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், ம.ஜ.த., தானாகவே கூட்டணியை முறித்து, பா.ஜ.,வுடன் கை கோர்க்கும் கட்டாய
சூழ்நிலையை உருவாக்க,சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


அப்படி பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்தால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக வேண்டும்
என்பது, சித்தராமையாவின் எண்ணம்.எதிர்க்கட்சி
தலைவராக அமர்ந்து, குமாரசாமி ஆட்சி நிர்வாகத்தை பற்றி கடுமையாக விமர்சிக்க வேண்டுமென்பது, சித்தராமையாவின் விருப்பம்.


இதை மனதில் வைத்தே, தான் முதல்வராக இருந்த போது செயல்படுத்திய, 'அன்னபாக்யா, இந்திரா உணவகம், விவசாய பாக்யா, மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம்' உட்பட, மற்ற திட்டங்களை பற்றியே சித்தராமையா குறிப்பிடுகிறார் என, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதற்கிடையில், காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுலுடன், தொலைபேசியில் பேசிய சித்தராமையா, ''மாநிலத்தில், ம.ஜ.த.,வுடனான கூட்டணியை, முறித்துக்கொள்வது நல்லது. ''இல்லையென்றால், அடுத்த, 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மறக்க வேண்டி வரும்,''என, ஆதங்கம் தெரிவித்து உள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.இது, ம.ஜ.த., தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)