கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க பா.ஜ., போர்க்கொடி

புதுடில்லி:'என்னைக் கொல்வதற்கு சதி நடக்கிறது' என கூறியுள்ள டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
டில்லி , முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக, சமீபத்தில் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டு

அவர் கூறியதாவது:எனக்கு பாதுகாப்பு
அளிப்பவர்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா போல், பாதுகாவலர்கள் மூலம் என்னைக் கொல்வதற்கு, பா.ஜ., சதி திட்டம் தீட்டியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


இதற்கு, பா.ஜ., கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர், பிரவீன் சங்கர் கபூர், டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அதில் கூறியுள்ளதாவது:டில்லி முதல்வர் கூறியுள்ள கருத்து, அவருக்கு பாதுகாப்பு அளிப் போரின் மன உறுதியை குலைக்கும் வகையில் உள்ளது. மேலும், தலைநகரில், முக்கிய பிரமுகர் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் உள்ள, டில்லி போலீசார்அனைவருக்கும், இது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு, தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க, டில்லி போலீஸ் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், பாதுகாப்பை நீக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்; டில்லி கவர்னர், ஆகியோருக்கும், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)