மேற்கு வங்க தேர்தலில் நேற்றும் வன்முறை

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், கடந்த ஆறு கட்ட ஓட்டுப் பதிவின் போதும், சில இடங்களில் வன்முறை வெடித்தது. தற்போது, ஏழாவது கட்ட ஓட்டுப் பதிவின் போதும், பல இடங்களில் வன்முறை வெடித்தது.

கோல்கட்டாவில் நடந்த, பா.ஜ., தலைவர், அமித் ஷாவின் தேர்தல் பிரசார பேரணியின் போது, வன்முறை வெடித்தது. அதனால், அங்கு, ஒரு நாளைக்கு முன்பாகவே, பிரசாரம் நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்த, ஒன்பது தொகுதிகளிலும், வன்முறை
சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் வந்து உள்ளன. ஜாதவ்புரில், திரிணமுல் காங்கிரசார், கள்ள ஓட்டு போட்டதாக, அந்தத் தொகுதி, பா.ஜ., - எம்.பி., அனுபவம் ஹாஸ்ரா புகார் கூறியுள்ளார்.

''தன்னை ஓட்டுச் சாவடிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை,'' என, பாட்பராதொகுதியின், திரிணமுல், காங்., - எம்.பி., மதன் மித்ரா கூறினார்.வடக்கு கோல்கட்டா தொகுதியின் இரண்டு ஓட்டுச் சாவடிகளில், கையெறி குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ., வேட்பாளர் ராகுல் சின்ஹா மீது, கல் வீசி தாக்குதல் நடந்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மேற்கு வங்கத்தில், கடந்த ஆறு கட்டங்களில் நடந்த ஓட்டுப் பதிவின் போது நடந்த வன்முறைகளைப் போலவே,7 வது கட்டத்திலும் நடந்துள்ளது. கடைசி கட்டத்தில் தேர்தல் நடந்த, ஒன்பது தொகுதிகளில், ஆறு தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. அதனால், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கும், வரும், 27ம் தேதி வரை, துணை ராணுவ படைகள் மாநிலத் தில் இருக்க வேண்டும். பழி வாங்குவோம் என, முதல்வரும்,திரிணமுல், காங்., தலைவரு மான, மம்தா பானர்ஜி, வெளிப்படையாக கூறியுள்ளார்.


அதனால், திரிணமுல், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்காத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், துணை ராணுவப் படை, மேற்கு வங்கத்தில் தொடர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)