"ரொம்ப காலம் வேண்டாமே"- நிதிஷ்

பாட்னா: லோக்சபா தேர்தல் நடந்து முடிக்க ரொம்ப காலம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறினார். நாடு முழுவதும் இன்று 7 ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பாட்னாவில், முதல்வர் நிதிஷ்குமார், லக்னோவில் உ.பி முதல்வர் யோகி , பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஓட்டளித்தனர்.
ஓட்டளித்த பின்னர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசுகையில்: தற்போது லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்க அதிக காலம் எடுத்து கொள்ளப்படுகிறது. மேலும் பலக்கட்டமாக நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் ஓட்டுப்பதிவில் அதிக இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும்.

ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை சரி அல்ல. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேசவுள்ளேன். மேலும் அனைவருக்கும் இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன். இவ்வாறு நிதிஷ் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)