காந்தி பற்றி சர்ச்சை: பா.ஜ., நிர்வாகி நீக்கம்

போபால் : பா.ஜ., வை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேசிய தந்தை என குறிப்பிட்டு பேசிய ம.பி., பா.ஜ., செய்தி தொடர்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிரக்யா சிங் தாகூர், கோட்சே குறித்து தெரிவித்த கருத்தை பிரதமரே தலையிட்டு கண்டித்துள்ள நிலையில், மீண்டும் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். ம.பி., பா.ஜ., செய்தி தொடர்பாளரான அனில் சவுமித்ரா தனது பேஸ்புக் பக்கத்தில், மகாத்மா காந்தி தேச தந்தை தான். ஆனால் பாகிஸ்தானுக்கு. இந்தியாவில் இது போன்று கோடிக்கணக்கான மகன்கள் உள்ளனர். சிலர் மதிப்புடையவர்களாகவும், சிலர் மதிப்பற்றவர்களாகவும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.இந்த பதிவு குறித்து அனில் சவுமித்ராவிடம் கேட்டதற்கு, தெரிந்தோ தெரியாமலோ அவர் தேசத்தின் தந்தை என கவுரவிக்கப்பட்டுள்ளார். மகாத்மா காந்தி நாட்டின் தேசதந்தை ஆக்கப்பட்டுள்ளார். ஆனால் பாக்,க்கு. இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரின் மகன் என பெருமைப்பட்டுக் கொண்டுள்ளோம் என்றார். இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுக்களில் இருந்தும் பா.ஜ., தலைமை நீக்கி உள்ளது. இது அவரின் தனிப்பட்ட கருத்தே அன்றி கட்சியின் கருத்து ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)