தேர்தல் கமிஷனர்கள் 'லடாய்'

புதுடில்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், தேர்தல் கமிஷனர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான அலோக் லவாசா தலைமை தேர்தல் கமிஷனருக்கு எழுதிய கடிதம் மூலம் இது வெளிவந்துள்ளது.
nsmimg691490nsmimg

3 கமிஷனர்கள் :இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், சுனில் அரோரா தலைமை தேர்தல் கமிஷனராகவும், சுஷில் சர்மா மற்றும் அசோக் லவாசா என மொத்தம் 3 பேர் உள்ளனர். முக்கிய முடிவுகள் அனைத்தும் இம்மூவருமே எடுப்பர்.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல்கள் நடக்கின்றன. 6 கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில், நாளை 7 வது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் கமிஷனர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

பின்னணி தகவல் :அதாவது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா குறித்து மொத்தம் 6 புகார்கள் வந்துள்ளன. பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் விவகாரம் என குறிப்பிட்டு பேசியது உட்பட இந்தப் புகார்களில் அடக்கம்.
nsmimg691490nsmimg

கருத்துவேறுபாடு :இவற்றில், மோடி மீதான 6 வழக்கில் 4 ல் எதிர்த்து வாக்களித்துள்ளார் அசோக் லவாசா. அமித்ஷா மீதான புகார்கள் அனைத்திலும் எதிர்த்து வாக்களித்துள்ளார். எனினும், மோடி மற்றும் அமித்ஷா இருவர் மீதான புகார்களை 'தவறேதும் இல்லை' என்றே தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம். இந்த முடிவுகள் 3 க்கு 2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் முடிவாகி உள்ளன.

கடிதம் :இந்நிலையில், இனிமேல் தான் தேர்தல் ஆணைய கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும், தனது கருத்து ஏற்கப்படாத நிலையில், தான் கலந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிர்ச்சி :இந்திய தேர்தல்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர்களிடையே எழுந்துள்ள இந்த கருத்து வேறுபாடுகள் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)