110 பெண் வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில், 110 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நாளை(மே 19) நடைபெறுகிறது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில், 15 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக, ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 110 பேர் (15%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 8 பேர் குறித்து விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

பா.ஜ.,வில் அதிகம்:காங்., சார்பில் போட்டியிடும் 54 பெண் வேட்பாளர்களில், 14 பேர் (26%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.,வில் 53 பேரில் 18 பேர் (34%) மீதும், திரிணமுல் காங்.,கில் 23 பேரில் 6 பேர் (26%) மீதும், பகுஜன் சமாஜில் 24 பேரில் 2 பேர் (8%) மீதும் கிரிமினல் வழக்குள் உள்ளன. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 665 பெண் வேட்பாளர்களில், 87 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

36% கோடீஸ்வரர்கள்:2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 225 பேர் (36%) கோடீஸ்வரர்கள். இவர்களில் காங்.,கில் 82 சதவீதம் (44 பேர்), பா.ஜ.,வில் 83 சதவீதம் (44 பேர்), திரிணமுல் காங்.,கில் 65 சதவீதம் (15 பேர்) மற்றும் பகுஜன் சமாஜில் 38 சதவீதம் (9 பேர்) கோடீஸ்வரர்கள். பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி. கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பெண் வேட்பாளர்களில் 219 பேர் கோடீஸ்வரர்களாகவும், போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.62 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-2019 15:56 Report Abuse
Endrum Indian அம்மாடி இவ்வளவு சொர்ணாக்காவா???ஆணுக்கு பெண் சமம் என்று பெண் (சமூக) ஆர்வலர்கள் (உளறுவாயர்கள்) சொல்வது சரிதான்???/
S.P. Barucha - Pune,இந்தியா
18-மே-2019 13:42 Report Abuse
S.P. Barucha பூலான் தேவியின் வாரிசுகள் , சிறைச்சாலை சீர்திருத்த சாலை ஆகவே அரசியல் தேர்தல் என்பது குற்றவாளிகளின் புகலிடம் .
Mugavai Anandan - Port Blair,இந்தியா
18-மே-2019 13:34 Report Abuse
Mugavai Anandan ஆண்கள்தான் ஊழலில் திளைத்தவர்கள் என்றால் ,....பெண் அரசியல்வாதிகள் இன்னும் மோசமாக உள்ளனர்,.இதில் நேரடியாக மக்களின் பல கோடி வரிப்பணத்தை செலவு செய்து தனது சின்னமான யானையை சாலை முக்குகளில் வைத்து நீதிமன்றத்தில் குட்டு பட்டார் மாயாவதி ,பிறகு நீதி மன்ற உத்தரவின் பேரில் அவை அகற்றப்பட்டதெல்லாம் தனிக்கதை. இரண்டாவதாக வருபவர் ஜெ. மணலில் இருந்து ஆரம்பித்து இலவசம் அந்த வசம் ,..இந்த வசம் என மறைமுகமாக பல வழியில் கொள்ளையடித்து பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து தானும் அனுபவிக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுக்காது மாபியா கும்பலிடம் மாட்டிக்கொண்டது ,..அது தனிக்கதை. இப்படி இவர்களை மட்டம் தட்டினார் ஒரே மெகா ஊழலில் 2g ஸ்பெக்ட்ரம் கனிமொழி .இவர்களை பின்தொடர்கிறார் இன்றைக்கு சாராத ஷிட் பண்ட் மம்தா .
partha - chennai,இந்தியா
18-மே-2019 12:29 Report Abuse
partha மம்தா இந்த பெண்களில் சேர்த்தியா?? ஆம்பளை ரௌடிகளை தோற்கடிப்பார் போலிருக்கிறதே
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-மே-2019 11:34 Report Abuse
S.Baliah Seer இந்த பெண்கள் கிரிமினல்களாக இருந்ததால்தான் இவர்களுக்கு சீட் தரப்பட்டிருக்கிறது.காதலித்து கல்யாணம் செய்த கணவனையும்,தான் பெற்ற குழந்தையையும் நேற்று ஒரு பெண் போட்டு தள்ளிவிட்டாள்.அந்த குழந்தை என்ன செய்தது ...அதை ஏன் கொன்றாள்? விரைவில் இவளும் அரசியல்வாதியாகி மந்திரி ஆனாலும் ஆவாள்.இந்திய தாயே இவர்களையும் சுமக்கிறாயே.
Aarkay - Pondy,இந்தியா
18-மே-2019 11:09 Report Abuse
Aarkay ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்கிறார்கள் (உதாரணம்: அம்மாவுக்கெல்லாம் அம்மா, மாயாக்கா, மம்தாக்கா, இறக்குமதி குடும்பம்)
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
18-மே-2019 08:58 Report Abuse
அசோக்ராஜ் அரசியல் போராட்ட வழக்குகள் மற்றும் மான நஷ்ட வழக்குகள் தவிர்த்து கணக்கு கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
18-மே-2019 08:41 Report Abuse
ஆப்பு ஆணும் பெண்ணும் சமம் என்ற பாரதியின் கனவு நனவாகி வருகிறது.
18-மே-2019 08:41 Report Abuse
ஆப்பு
18-மே-2019 08:41 Report Abuse
ஆப்பு
மேலும் 3 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)