7ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

புதுடில்லி: நாடு முழுவதும் 17-வது லோக்சபா தேர்தலுக்கான 7-ம் கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 8 மாநிலங்களில் 59 லோக்சபா தொகுதிகளுக்கான 7-ம் கட்டதேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.

இதையடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஒய்ந்தது. தவிர தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

ஆலோசனை



4 தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முதலிடம்



லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 3439.39 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் மட்டும் ரூ. 227.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)