அரசியல் தாகம் அடங்காது: பிரியங்கா

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இனிமேல் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்பதை பிரியங்கா தெளிவுபடுத்தி விட்டார்.

தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த நிலையில் பஞ்சாப்பில் இருந்து வெளியாகும் ‛‛தி டிரிபியூன்'' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியதாவது: காங்.,கின் பொதுச்செயலாளர் என்ற முறையில் ராகுலின் தலைமையில் இனிமேல் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்வேன். குடும்பத்தையும் அரசியலையும் சமாளிப்பதில் இனிமேல் எனக்கு சிரமம் இல்லை. நான் அரசியலில் இருப்பதையே என் குழந்தைகளும் தனிப்பட்ட முறையில் விரும்புகின்றனர். சமையல், வீட்டு வேலை என்று எனது அரசியல் திறமையை நான் வீணடிப்பதாக என் மகன் என்னை கிண்டல் செய்வது உண்டு.


கடந்த சில மாதங்களாக அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர்.என் மகன் தற்போது வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்தாலும், இங்கு நடப்பதை அடிக்கடி கேட்டு தெரிந்துகொள்வான். அது பற்றி மெசேஜ்களை அனுப்பிக்கொண்டே இருப்பான். என் மகள் தான் என்னுடனேயே எப்போதும் இருப்பார். இப்போது அரசியலில் நான் பிசியாக இருப்பதால், அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை உணர்கிறார். அவரும் எனக்கு ஒரு பலம் தான்.எனக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் எனது பிள்ளைகளுடன் தான் செலவழிப்பேன். அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

கோழை இல்லைதீவிர அரசியலுக்கு வராவிட்டால் என்னை ஒரு கோழை என்று நினைத்துவிடுவார்கள். எனது வாழ்வை நான் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறேன், அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துகொண்டேன்.திறமை இருந்தும், என்னால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று தெரிந்தும், நான் சும்மா இருக்கக் கூடாது. ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, நமது அரசியல் சாசனம் திருத்தப்படும்போது நான் சும்மா இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நான் ஒரு கோழை. ஒரு கோழையாக வாழ நான் விரும்பவில்லை.நான் ஒரு சாதாரண மனுஷி. மற்றவர்களைப் போலத் தான் நானும் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்க விரும்புகிறேன்.


எனது சகோதரர் ராகுல் ஒரு ஆன்மிகவாதி போன்றவர். அவரை பா.ஜ., தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. நமது நாடு, அதன் மதங்கள், அதன் அரசியல், அதன் அதிகாரம் போன்றவற்றை ராகுல் நன்கு புரிந்துள்ளார்.அவருக்கு அகங்காரமோ, தான் என்ற எண்ணமோ கிடையாது.2013ல் ஜெய்ப்பூரில் ராகுல் பேசியது பற்றி பலர் கிண்டல் செய்தனர். அவர் அன்று, தனக்கு அதிகார ஆசை கிடையாது என்று தான் பேசினார். உடனே, அவருக்கு பதவி ஆசை இல்லாமலா இருக்கும் என்று கேள்வி கேட்கின்றனர்.இதனால் உண்மையில் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதையே பலர் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அவருக்குள் பதவி ஆசை இல்லை. வெளியே இருந்து தான் அதிகாரம் அவரை தேடி வருகிறது. இதில் ராகுல் தெளிவாக இருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் இவ்வளவு தெளிவான சிந்தனை கிடையாது.

பெண்களுக்கு வாய்ப்பு தேவைஇந்திய அரசியலில் பெண்கள் போதிய அளவு பங்கு பெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்திய போர்க்கப்பலில் எங்கள் அப்பா ராஜிவ் விடுமுறையை கழித்தார் என்று எழுந்த சர்ச்சையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது தந்தையைப் பற்றி பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்று கவலைப்படும் கடைசி ஆளாக நான் இருப்பேன். இந்த பிரச்னை தேவையே இல்லாதது. என் தந்தையை பிரதமர் சந்தித்ததே இல்லை. என் தந்தையைப் பற்றி எனக்கு தெரியும். அப்படி இருக்க, என் தந்தையைப் பற்றி பிரதமரோ மற்றவர்களோ சொல்வது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)