ஆசாத் அந்தர் பல்டி : எதிர்க்கட்சிகள் குழப்பம்

புதுடில்லி : பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் உண்மையில்லை என்று, ஏற்கனவே தான் கூறிய கருத்திலிருந்து அந்தர் பல்டி அடித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

அந்தர் பல்டி :டில்லியில் பேட்டியளித்த ஆசாத் கூறுகையில், ''பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது. பாரம்பரியமிக்க, பழமையான கட்சி காங்கிரஸ். 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை,'' என்றார்.

சிம்லா பேட்டி :முன்னதாக,சிம்லாவில் பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத், ''நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என் கூறி இருந்தார்.

பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்னை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது என கூறி இருந்தார்.

குழப்பம் :காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வரும் மே 23 அன்று டில்லியில் கூட்டியிருக்கிறார். பா.ஜ., அல்லாத ஆட்சிக்கு ஆதரவு என்று ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்ததால், உற்சாகத்தில் இருந்த மாநில கட்சிகள், தற்போது திடீரென காங்., தன் கருத்தை மாற்றிக்கொண்டதால் குழப்பம் அடைந்துள்ளன.


skv - Bangalore,இந்தியா
18-மே-2019 06:38 Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்த ஆளு ஒன்னம் நம்பர் பிராடுங்க இவன்தான் ராகுல்காந்திக்கு எழுதித்தறான் அதையும் தாப்புத்தப்பா பேசிண்டு நிக்குது ராவுளு தங்கச்சிக்கு கேக்கவே வேண்டாம் தான் ரொம்பவே படிச்சுட்ட மேதாவின்னு எண்ணம் இவர்களை நம்பி சொத்து சேர்த்த சோனியா ஒரு உலகமகா பிராடு
blocked user - blocked,மயோட்
17-மே-2019 20:33 Report Abuse
blocked user வின்சி குடும்பத்தின் பிரதான குறிக்கோள் பிரதமர் பதவி. அது இல்லை என்றால் இந்திய நீதித்துறை அவர்களை சிறையில் அடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஹெரால்டு மோசடி வழக்கில் தப்பிப்பது சிரமம். யார் பிரதமராக வந்தாலும் சு சாமி இவர்களை கண்டிப்பாக விடப்போவது இல்லை. குடியுரிமையை பறிக்க ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.
17-மே-2019 19:40 Report Abuse
venkatarathinam modi will cross 300 seats
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மே-2019 19:26 Report Abuse
Cheran Perumal சோனியாவுக்கு இதுதான் கடைசி தேர்தல் என்பதால் ராகுலை பிரதமராக்க கடுமையாக முயற்சி செய்வார்.
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-2019 18:35 Report Abuse
J.V. Iyer நாட்டை கெடுக்கவந்த கோடாலிக்காம்பு தான் இவர்.
S.R. Nagarajan - Chennai,இந்தியா
17-மே-2019 18:21 Report Abuse
S.R. Nagarajan ருசி கண்ட பூனை சொல்கிறது, சரியாகத்தான் இருக்கும் பொறுப்பு இல்லாமல் அதிகாரம் செலுத்துவது தனி சுகம்.
சீனு, கூடுவாஞ்சேரி ஊழலில் ஊறிய தீயசக்திகளுக்கு பதவி ஒன்றே குறிக்கோள். இல்லை என்றால் இருமுறை மதவாதிகளை எதிர்கிறேன் என்று மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று ஊழல். பின்னர் பண்டாரபரதேசிகளுடன் சேர்த்து கொள்ளை. இந்த பகுத்தறிவாளர்களுக்கு ஊழல் தான் கொள்கை. உலகம் போற்றும் மோடியைப் பற்றி பேச இவர்கள் எள்ளளவும் தகுதியில்லாதவர்கள்.
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-மே-2019 17:03 Report Abuse
Nagarajan D குழப்பமே உன் பெயர் காங்கிரெஸ்ஸா
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
17-மே-2019 16:53 Report Abuse
Vaideeswaran Subbarathinam This time she invited all the opposition parties .She knows that ultimately they are bound to support Congress and some one will be the king maker.
sahayadhas - chennai,இந்தியா
17-மே-2019 16:41 Report Abuse
sahayadhas அடுத்த பிரதமர் ராகுல் இதில் சிறிதளவும் சந்தேகமி ல்லை
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-மே-2019 18:13Report Abuse
Nagarajan Dபாகிஸ்தானுக்கா...
மேலும் 15 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)