தேர்தல் முடிவு : பதற்றத்தில் பங்குச்சந்தைகள்

மும்பை : மே 23 ம் தேதி வெளியாக உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பதற்றம் இந்திய பங்குச்சந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடும் போட்டியாகுமோ என்ற பயம் மற்றும் பதற்றம் காரணமாக பங்குச்சந்தைகள் , ரூபாய் மதிப்பு ஆகியன சரிவுடனேயே காணப்படுகின்றன.


விவசாயிகள் பிரச்னை, வேலையின்மை பிரச்னை ஆகியவற்றால் 2014 லோக்சபா தேர்தலை போன்ற மற்றொரு மாபெரும் வெற்றியை பிரதமர் மோடி பெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதில் இந்திய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பங்குச்சந்தைகள், பாண்டுகள் மதிப்பு கடுமையாக சரிவடையவும், சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு 75 வரை செல்லவும் வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய அரசை தேர்வு செய்வதற்கான பணிகள் மே 23 ல் துவங்க உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் காணப்படுகின்றன. டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் 3 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை இழந்த போது, ஓட்டு எண்ணிக்கை நாளன்று இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்தது. கிட்டதட்ட அதே போன்றதொரு நிலை தான் தற்போதும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மத்தியில் ஆளும் பா.ஜ., தோல்வி அடைந்தாலோ அல்லது தனிப்பெரும்பான்மையை பெற தவறினாலோ பங்குச்சந்தைகளும், ரூபாய் மதிப்பும் கடுமையான சரிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணரான பிரகாஷ் சக்பால் தெரிவித்துள்ளார். அதே சமயம், பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்து பங்குச் சந்தைகளும், உள்நாட்டு பொருளாதாரமும் ஸ்திர தன்மையுடனும், உயர்வுடனும் இருக்கும் உதவி செய்யும் என மும்பையில் உள்ள சில நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. சர்வதேச மற்றும் ஆசிய அளவில் முக்கியமான 5 நிறுவனங்கள் நடத்திய இந்திய ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்த அலசல் விபரங்கள் இதோ :

மோடி - பா.ஜ., வெற்றி பெற்றால் :
ஸ்காட்டியாவங்கி - 67
கோடாக் செக்யூரிட்டிஸ் - 68
போப் ஏஎம்எல் - 68-70
எடெல்வியஸ் - 69
டிபிஎஸ் வங்கி - 69

மோடி - பா.ஜ., தோல்வி அடைந்தால் :
ஸ்காட்டியாவங்கி - 72
கோடாக் செக்யூரிட்டிஸ் - 75
போஃப் ஏஎம்எல் - 72
எடெல்வியஸ் - 71.5
டிபிஎஸ் வங்கி - 74வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)