காங்.,ஐ மன்னிக்காதீர்கள்: பிரதமர் பேச்சு

கார்கோன்: காங்கிரசை மக்கள் மன்னிக்கக் கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ம.பி., மாநிலம் கார்கோன் நகரில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: மீண்டும் என்னை பிரதமராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ள மக்களுக்கு நன்றி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் காம்ரூப் வரையிலும் ஒட்டு மொத்த நாடும், பா.ஜ., கூட்டணி 300 இடங்களை தாண்டும் என சொல்கின்றனர். பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு 130 கோடி மக்களின் தேர்வு.
இந்த ஞாயிறு நீங்கள் ஓட்டளிக்கும்போது, மீண்டும் ஒரு வரலாற்றை படைக்க உள்ளீர்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாவது முறையாக மெஜாரிட்டி அரசை தேர்வு செய்ய உள்ளீர்கள்.


எனது முதல் தேர்தல் பிரசாரம் உ.பி.,யின் மீரட் நகரில் துவங்கியது.ம.பி.,யின் கார்கோன் நகரில் நிறைவு பெறுகிறது. வரலாற்று ரீதியாக இரண்டு நகரங்களுக்கும் தொடர்பு உள்ளது. 2019 தேர்தல் முந்தைய தேர்தலை விட வித்தியாசமானது. இந்த தேர்தலில், மக்கள், நாட்டிற்காக ஓட்டளிக்க உள்ளனர். கட்சிக்கு ஓட்டளிக்க முடியவில்லை. புதிய இந்தியாவை கட்டமைக்க ஓட்டு போடுகின்றனர்.
சத்துணவு கிடைக்காதவர்கள் ராணுவத்தில் சேர்ந்து, வீரர்களாக மாறுகின்றனர் எனக்கூறிய கர்நாடக முதல்வர் குமாரசாமியை காங்கிரஸ் கண்டிக்கவில்லை. கூட்டணி கட்சியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்காத காங்கிரசை மக்கள் மன்னிக்கக் கூடாது. அடுத்த முறை, சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.


skv - Bangalore,இந்தியா
18-மே-2019 06:34 Report Abuse
skv<srinivasankrishnaveni> எஸ் மீண்டும் மோடிஜி உங்கள் ஆட்சியே தான் வேண்டும் என்றும் தினம் நான் prayer பண்றேன் , கோயில்கள் செல்ல முடியலேன்னாலும் என் வீட்டுலே தினம் தீபம் ஏற்றி வேண்டிவருகிறேன் என் முருகனும் கணேஷாவும் அனுமாருக்கு என்னை ஏமாற்றியதே இல்லீங்க
18-மே-2019 06:10 Report Abuse
Aravamuthan Senthilkumar காமெடி பண்றாராம் மோடி
18-மே-2019 04:12 Report Abuse
Ramanathan Nagappan Another lie to the grand list. I hope someday script writers will write true facts so that Mr Modi can read it. As per election commission data only 31 ie roughly 40 crores of people voted for BJP not entire country as he claims 130 crores.
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-மே-2019 04:07 Report Abuse
Rpalnivelu தவறு. திருட்டு டுப்லிகேட் காந்தி குடும்பம் ஆட்டைய போட்ட கான்க்ராஸை மன்னிக்காதீர்கள் என்று மோடி திருத்திக் சொல்ல வேண்டும்.
Prabu.KTK - Coimbatore,இந்தியா
17-மே-2019 23:23 Report Abuse
Prabu.KTK வாழ்க மோடி . வாழ்க பிஜேபி. வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்.
Ramesh Lal - coimbatore,இந்தியா
17-மே-2019 23:20 Report Abuse
Ramesh Lal குடிநீர் மீது கண்போட்டுவிட்டாரா , போச்சுடா இவர் வந்தால் பாட்டில் குடிநீர் ஒரு லிட்டர் 50 ரூபாயோ 100 ரூபாயோ நினைத்தாலே பயமாக இருக்கிறது, இனி அம்பானியோ, அத்தாணியோ மட்டும் தான் போர் வெல் அமைக்க முடியும் என நினைக்க தோன்றுகிறது.
17-மே-2019 17:55 Report Abuse
Sadagopan Manickam மோடியை பார்த்தால் பாவமாக இருக்கிறது
17-மே-2019 17:16 Report Abuse
ஆப்பு என்னாது? மீண்டும் இவரு பிரதமாக மக்கள்.முடிவு செஞ்சுட்டாங்களா? அன் அஃபிசியலா ஓட்டையெல்லாம் எண்ணி இவருக்கு சொல்லிட்டாங்களா? இல்லே முடிஞ்ச வரைக்கும் ஓட்டுக்களைப் பீராயலாம்னு பேசுறாரா?
Arachi - Chennai,இந்தியா
17-மே-2019 16:25 Report Abuse
Arachi மோடியைப்பார்த்தாலே போன தேர்தலில் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள்தான் மற்றும் GST பணமதீப்பீட்டு பொருளாதார வீட்ச்சி இவைதான் நினைவில் வருகிறது
Poovannan - Villupuram,இந்தியா
17-மே-2019 16:10 Report Abuse
Poovannan உண்மை தான் காங்கிரஸ் ஐ மன்னிக்க முடியாது உம்மை போன்றவர்களை வளரவிட்டதிற்க்கு
மேலும் 3 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)