பதற்றத்தில் காங்.,: ஸ்மிருதி இரானி தாக்கு

ஷாஜாபுர் : லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை வாங்குவதற்காக அமேதிக்கு சென்று தொழுகை நடத்தும், காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, அதே சமயம் ம.பி.,யில் மகாகாலேஸ்வர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதாக மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அமேதியில் காங்கிரஸ் கடும் பதற்றத்தில் உள்ளது. அதனால் தான் அதன் பொதுச் செயலாளர் அங்கு சென்று தொழுகை நடத்துகிறார், ஓட்டுக்களை பெறுவதற்காக. தற்போது ம.பி.,யில் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கும் அவர் சென்று, வழிபாடு நடத்தி உள்ளார் என்றார்.


தொடர்ந்து காங்., தலைவர் ராகுல் குறித்து பேசிய ஸ்மிருதி, ம.பி., சட்டசபை தேர்தலுக்கு முன், விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக ராகுல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அங்கு அவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் துரோகம் செய்து விட்டார். தற்போது, தன்னிடம் மந்திரக்கோல் ஏதும் இல்லை என்கிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

அதே சமயம் ராகுலோ, தான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ம.பி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)