பா.ஜ., அடுத்த சர்ச்சை : கோட்சேவுடன் ராஜிவை ஒப்பிட்ட எம்.பி.,

பெங்களூரு : மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் பேசியது நேற்று சர்ச்சையாக்கப்பட்டது. பா.ஜ., தலைமை கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங். இந்த சர்ச்சை ஓய்வதற்குள், கோட்சேவுடன் முன்னாள் பிரதமர் ராஜிவை ஒப்பிட்டு பா.ஜ., எம்.பி., ஒருவர் பேசி உள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.


கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ., எம்.பி., நளினி குமார் கட்டீல். இவர் தக்ஷினா தொகுதியில் 2 முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கோட்சே ஒருவரை தான் கொன்றார். மும்பை பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதி காசிப் 72 பேரை கொன்றான். முன்னாள் பிரதமர் ராஜிவ் 17,000 பேரை கொன்றார். இவர்களில் யார் கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் பிரதமரான ராஜிவ் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போதைய லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வினர் அடுத்தடுத்து ராஜிவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது, ராஜிவ் ஒரு ஊழல்வாதி என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து பல பா.ஜ., தலைவர்களும் சீக்கிய கலவரம் மற்றும் ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


17-மே-2019 22:50 Report Abuse
kulandhai Kannan சரித்திர உண்மையைத்தானே பேசியிருக்கிறார்.
17-மே-2019 22:50 Report Abuse
kulandhai Kannan சரித்திர உண்மையைத்தானே பேசியிருக்கிறார்.
G.Prabakaran - Chennai,இந்தியா
17-மே-2019 16:55 Report Abuse
G.Prabakaran தலைவன் எப்படியோ தொண்டனும் அப்படியே காலம் சென்ற தலைவர்களையே பிடித்து தொங்கி கொண்டிருப்பார்கள்.
ramanathan - Ramanathapuram,இந்தியா
17-மே-2019 16:34 Report Abuse
ramanathan மோகன்தாஸ் கரம்சந்த் கோட்சே கையால் மரணம் சம்பவிக்கப்படவில்லை என்றிருந்தாலும். இந்துக்கள் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். பதவி வெறி பிடித்த களவாணி காங்கிரஸ் கட்சியோ நேருவோ ஆட்களை நியமித்து கொன்றிருப்பார்கள். இவர்களால் கரம்சந்தின் கொள்கைகளை வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது.
ramanathan - Ramanathapuram,இந்தியா
17-மே-2019 16:23 Report Abuse
ramanathan //முன்னாள் பிரதமர் ராஜிவ் 17,000 பேரை கொன்றார். //மோகன்லால் கரம்சந்த் மறைவிற்கு பிறகு ஆயிரமாயிரம் மக்கள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள்.
Arachi - Chennai,இந்தியா
17-மே-2019 16:12 Report Abuse
Arachi மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் பிடியில் இந்தியா, காப்பாற்றியே ஆகவேண்டும். வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வரவேண்டிய இந்தியா வீணர்களின் தவறான தத்துவங்களால் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது.மதத்தை கையில் எடுத்துக்கொண்டு மதம்பிடித்து அலைகிறது
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-2019 16:02 Report Abuse
Endrum Indian இது சரித்திர உண்மை தான் என்ன அந்த எண்ணிக்கை தான் கொஞ்சம் அதிகம் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. என்ன கோட்ஸே தனி ஒருவன், ஒருவரை கொன்றான். ராஜீவ் கான் கொல்லும்போதும்/ கற்பழிக்கும் போதும்/வீடு கொள்ளையடிக்கப்படும் போதும் முஸ்லீம் காங்கிரஸ் மக்களால், பிரதமராக இருந்தும் ஒரு நடவடிக்கை எடுக்காமல் அதுவே அடங்கும் வரை அமைதி காத்தான் ஏதோ ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் என்ன செய்கிறானோ அதை இது காட்டுகின்றது. ஆகவே இந்த ஒப்புவமை முற்றிலும் சரியே .
mayavan - Chennai,இந்தியா
17-மே-2019 15:30 Report Abuse
mayavan முடிந்து போன நிகழ்வுகளை மீண்டும் கிளப்புவது வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பது போல் ஆகும் சுதந்திரம் கிடைத்த நேரங்களில் உணர்ச்சி பேருக்கு எடுத்து இம்மாத்திரையான சம்பவங்கள் நடந்தது நமது போறதா நேரம்.அட்டைலத்தி தமிழ்நாடு அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம் கமல் அய்யா வேறு ஒரு அரசியல் மற்றம் செய்வார் என்று எதிர் பார்த்தால் வீரமணி அய்யா அவர்களின் சீடராக இருக்குகிறாரே? கலைஞர் மற்றும் புரட்சி தலைவி மறைவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை சுதந்திரம் அடைத்த போது இருந்ததை விட மோசமாக உள்ளது என்று கவலைப்பட தோன்றுகிறது
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-மே-2019 14:59 Report Abuse
Sridhar உண்மைதானே? கோட்ஸே யாவது ஒரே ஆளை நேராக நின்று சுட்டுவிட்டு ஓடாமல் ஒளியாமல் சரணடைந்து சட்டத்திற்கு பணிந்து தூக்கு தண்டனையை ஏற்று தியாகி ஆனார். ஆனால் இந்த திருட்டு ராஸ்கல் பயல்கள் ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றதோடு இல்லாமல், சட்டத்தின் மூலை முடுக்குகளில் ஒளிந்துகொண்டு இன்று வரை தண்டனையிலிருந்து தப்பித்து வந்திருக்கின்றனர். லச்சக்கணக்கான இந்தியர்களின் சாவுக்கு காரணமாய் இருந்த காந்தியை கோட்ஸே கொன்றார். கொள்வது சட்டப்படி குற்றம் என்றாலும் அதில் ஒரு நாட்டு மக்களோடு இணைந்த காரணம் இருந்தது. ஆனால் ராஜிவ் காந்தி சீக்கியர்களை சூறையாடியதற்கு காரணம் அவர்களில் ஒருவர் இந்திராவை கொன்றான் என்பதால். அந்தவகையிலும் ராஜீவின் குற்றம் கோட்ஸேயை விட மிக கொடுமையானது.
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
17-மே-2019 14:34 Report Abuse
Krishnamurthy Ramaswamy இவ்வளவு வருடங்களாக 'குஜராத் கலவரம் பற்றி பேசும்போது மோதியை கடுமையாக தாக்கி வந்த காங்கிரசும் மற்ற செகுலர் வாதிகளும் 'இதுநாள் வரை தில்லியில் சீக்கியர்களை படு கொலையும் அது காங்கிரஸ் தலைவர்கல் பற்றியும் மூச்சு விட்டதில்லை . பத்திரிக்கையாளர்களும் சரி அவர்களது குறிக்கோ 'ஜீயர் கூறியதைப்போல் இந்து மதத்தையும் இதுக்களையும் குறி வைத்தும் ' இஸ்லாம் கிருத்துவர்கள் மிக புனிதவர்கள் போல் 'ஒரு மாயையை உண்டாக்குவதே ' இப்போது அதுவும் இவ்வளவு வருடங்கள் கழித்து ' ராஜீவின் முகத்திரை கிழிக்கப்படுகிறது ' ஒரு காந்தியை கொன்றவன் தீவிர வாதியானால் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்ல துணை போன காங்கிரஸ் காரர்கள் எப்படி ,பயங்கர வாதிகள் இல்லையா .
மேலும் 25 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)