என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல்

சென்னை: நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, அதே நேரத்தில் என்னை கைது செய்தால் மேலும் பதட்டம் அதிகரிக்கும். கைது செய்யாமல் இருப்பதே நல்லது. ஆகையால் என்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடவில்லை. அறிவுரையாக சொல்கிறேன் என சென்னையில் நிருபர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது: கோட்சே குறித்து நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். என்னை போன்றவர்கள் பேசுவதால் மகாத்மாவின் செய்திகள் வெளியே தெரிய வரும். சென்னை மெரினா கடற்கரையில் பேசியதைதானே கூறினேன். இப்போது மட்டும் ஏன் பொங்குகின்றனர் ? இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை.
நான் பேசியதை முழுமையாக கேட்டு பாருங்கள், வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால், யாரும், யாரையும் குற்றம் சொல்ல தானே முடியும்.

இந்துக்கள் யார், ஆர்எஸ்எஸ் யார் என மக்கள் பிரித்து பார்க்க வேண்டும். புண்படுவது, கோபப்படுவது அரசியல் சாதனங்கள். எனக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது. எனக்கு எதிராக பெரிய கூட்டம் இல்லை. 2 பேர் , நான்கு பேர் என்பதால் பதட்டப்பட வேண்டியது இல்லை.

மோடிக்கு பதில் இல்லைதீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு உங்கள் பதில் என்ன என நிருபர்கள் கேட்டதற்கு; " மதிப்புமிகு பிரதமர் மோடி அவர்கள் ஞானம் அதிகம் கொண்டவர் என்று சொல்கின்றனர். அவருக்கு எல்லாம் தெரியும். இவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் அவருக்கு பதில் சொல்லும்.கேள்வி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உங்களின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியிருக்கிறாரே ?

பதில்: அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது.


கேள்வி: உங்களை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளனரே ?

பதில்: நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, கைது செய்யட்டும், பிரசாரம் இருக்கிறதே என நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னை கைது செய்தால் மேலும் பதட்டம் அதிகரிக்கும். கைது செய்யாமல் இருப்பது நல்லது. ஆகையால் என்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடவில்லை. அறிவுரையாக சொல்கிறேன் . இவ்வாறு கமல் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)