56 இன்ச் மார்பில் இதயம் எங்கே : பிரியங்கா தடாலடி

லக்னோ : கடந்த தேர்தலில் தனக்கு 56 இன்ச் மார்பு இருப்பதாக பெருமையடித்துக் கொண்ட பிரதமர் மோடியிடம், அதற்குள்ளே இதயம் எங்கே என்று கேட்க விரும்புகிறேன் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தடாலடியாக பேசியுள்ளார்.

பிரியங்கா பிரசாரம் :அச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என்றும், தாம் அவ்வாறு கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பெருமையாக கூறி பிரசாரம் செய்தார். '56 இன்ஞ் மார்பு' பிரசாரம் அப்போது பெரியதாக பேசப்பட்டது.

இந்நிலையில் 56 இன்ஞ் மார்புக்குள் இருக்கும், இதயத்தை எங்கே என்று பிரியங்கா பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் சகோதரியான பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

இதயம் எங்கே? :இன்று மகராஜ்கஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், பிரியங்கா பேசுகையில் ''என்னிடம் 56 இன்ஞ் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறினீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே என்று அவரிடம் நான் கேட்கிறேன்.

தேசப்பற்று பற்றி பேசும்போதெல்லாம் மோடி பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பததெல்லாம் பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான் என்று நினைக்கிறார். அவருக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை தேசப்பற்று கிடையாது.

மூன்று ரூபாய் :கிஷான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பா.ஜனதா கூறுகிறது. ஆனால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒருநாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதனால் அவர்கள் விவசாயிகளை அவமானப்படுத்துகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகைளை அழித்துள்ளனர். பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்'' என்று குற்றம்சாட்டினார், பிரியங்கா.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)