தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சம் : கெஜ்ரிவால்

புதுடில்லி : லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்படுவதாக மாநில கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் கமிஷனை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ''தேர்தல் கமிஷன் மோடியின் பேரணிக்கு அனுமதி அளிக்கிறது. அவரது பேரணிக்குப்பின் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தல் கமிஷன் முழுவதுமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. இது நாட்டுக்கு மிகப்பெரிய பேராபத்து'' என்றார்.


J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-2019 03:28 Report Abuse
J.V. Iyer யார்பக்கம் நியாயம் இருக்கிறோதோ அவர்கள் பக்கம் தீர்ப்பு சொன்னால் ஒருதலைப்பட்சமா? ஞான சூனியன்கள்.
Gnanam - Nagercoil,இந்தியா
17-மே-2019 00:40 Report Abuse
Gnanam தோற்றுப்போனால் ஏதாவது காரணம் காட்டவேண்டும். ஆகவே இப்போதே ஏதாவது சொல்லிவைப்பது நல்லது என்று நினைக்கிறார்கள் எதிர்க்கட்சி தலைவர்கள். அப்படியாவது மன அமைதி கிடைக்கட்டும்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)