தேர்தல் ஆணையத்திற்கு எதிர்கட்சிகள் கண்டனம்

புதுடில்லி: பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தடைவரும், 19ல் நடக்கும் கடைசி லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. இதற்காக, பா.ஜ., சார்பில், அதன் தேசியத் தலைவர், அமித் ஷா தலைமையில், கோல்கட்டாவில், நேற்று முன்தினம்(மே 14) பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே, மோதல் ஏற்பட்டது; அது, வன்முறையாக மாறியது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., திரிணமுல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் நடக்கும் தொகுதிகளில், நாளை ( 17 ம் தேதி) பிரசாரம் முடிவடைவதாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வன்முறை வெடிப்பதாலும், அசாதாரண சூழல் நிலவுவதாலும், இன்று(மே 16) இரவு, 10:00 மணியுடன், பிரசாரத்தை முடிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.,விற்கு சாதகம்இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஒரு தலைபட்சமானது. இதனால், பா.ஜ.,தான் பலம்பெறும். பிரதமர் மோடி பிரசாரம் நிறைவு பெற்ற பின்னர் தடை அமலுக்கு வருகிறது என்றார்.

திட்டமிடல்பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில்; இன்று காலை முதலே தடை விதித்திருக்கலாம். இது நேர்மையான நடவடிக்கை அல்ல. நெருக்கடியின் கீழ் செயல்படுகிறது. மம்தாவை, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறிவைத்துள்ளனர். இது நன்கு திட்டமிடப்பட்டது. அபாயகரமானது. இவ்வாறு அவர் கூறினார்.


கேள்விகாங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது. மோடி - அமித்ஷாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. பிரதமர் சுதந்திரமாக பேரணி நடத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள்(எம்சிசி) மோடியின் தேர்தல் தீயநடத்தையாக மாறிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளது.


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்கத்தில் ஒரு நாளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது பாரபட்சமானது. தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதி, ஆளுங்கட்சிக்கு ஒரு விதி என செயல்படுகிறது எனக்கூறியுள்ளார்.

மம்தா நன்றிமம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கை: மேற்கு வங்க மக்களுக்கும், எங்களுக்கும் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி. பா.ஜ.,வின் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஜனநாயகம்மீதான நேரடி தாக்குதல். மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)