எதிர்க்கட்சி கணிப்பு தவறு: பிரதமர் பேச்சு

மவு: எதிர்க்கட்சிகளின் கணிப்பு தவறாக முடிந்துள்ளதால், தன்னை விமர்சிப்பதை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் மவு மற்றும் சந்தவுளி என்ற இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்க்கட்சியினரின் மோடி வெறுப்பு கோஷம் தோல்வியடைந்துள்ளது. அவர்களின் கணிப்பு தோல்வியடைந்துள்ளது. இதனால், என்னை விமர்சிப்பதை அதிகரித்துள்ளனர். தங்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்ள மிரட்டுவதற்காக மத்தியில் 'கிச்சடி' அரசு அமைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.


என்னையும், தேர்தல் ஆணையத்தையும் மாயாவதி விமர்சனம் செய்கிறார். ஆனால், மேற்கு வங்கத்தில் உ.பி., மற்றும் பீஹார் மக்களால் நடத்தப்படும் முறைக்கு மம்தாவை, மாயாவதி விமர்சிக்கிறார் என கருதுகிறேன்
மேற்கு வங்கத்தின் டம் டம் நகரில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். இதனை, மம்தா அனுமதிக்கிறாரா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். முன்பு போல் அவர் தொடர்நது செயல்பட்டால், அவர் , எனது ஹெலிகாப்டர் தரையிறக்க அனுமதிக்க மாட்டார்.

பலாத்கார வழக்கில் தலைமறைவானவர்களுக்கு சமாஜ்வாதி - பகுஜன்சமாஜ் கூட்டணி வாய்ப்பு வழங்கியது. இதில், சமாஜ்வாதிக்கு வரலாறு உள்ளது. மக்களுக்கு இது தெரியும். ஆனால், அது போன்ற வேட்பாளர்களுக்கு மாயாவதி ஆதரவு கேட்கிறார். கோல்கட்டாவில் பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் பேரணியின் போது, திரிணாமுல் தொண்டர்களின், வன்முறையை பார்த்தோம். அவர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தினர். வித்யாசாகர் கொள்கையில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஏற்கனவே இருந்த இடத்தில் மிகப்பெரிய சிலையை நிறுவுவோம்.

எங்களது கொள்கை தெளிவாக உள்ளது. நமது வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம். எல்லைக்கு உள்ளேயும், வெளியேயும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமான பயங்கரவாதிகளை கொல்வோம். இந்தியாவில் பலன்களை அனுபவித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாதிகளை கடுமையாக கையாண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)