கருத்து கணிப்பு: டுவிட்டருக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான பதிவுகளை அகற்றும்படி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆளும் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து டுவிட்டரில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து அந்த கருத்தினை பதிவிட்டவர், அதனை அகற்றி உள்ளார். யார் புகார் அளித்தது என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான ஆய்வை வெளியிட்ட 3 மீடியாக்களுக்கு தேர்தல் கமிஷன் விதிமீறல் நோட்டீஸ் அனுப்பிய அடுத்த நாளே டுவிட்டரில் கருத்து பதிவிடப்பட்ட புகார் வந்துள்ளது. புகார் வந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கள் தொடர்பான கருத்துக்கள் பதிவிடப்பட்டால், அதனை உடனடியாக அகற்றும் படி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது.மாநிலங்களின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 ஏ.,வின் படி, யார் ஒருவரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நடத்தவோ அல்லது பிரிண்ட் அல்லது எலக்ட்ரானிக் மீடியாவில் அதனை வெளியிடவோ கூடாது. இந்த விதி முதல் கட்ட தேர்தல் துவங்குவதற்கு முன்பு துவங்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்து முடிந்த அரைமணிநேரம் வரை தொடரும். இந்த சட்டத்தை மீறுவோர் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதத்துடனான சிறை தண்டனைக்கு உட்பட்டது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)