எங்கள் ஆட்சியில் 6 பெண்கள் அமைச்சர்; சுஷ்மா

புதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.

வாரணாசியில் நடந்த பெண்கள் சம்மேளன கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு காலத்தில்1952-57 ல் ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்ற ஒரு பெண்ணே காபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1957- 62 ல் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. 1962- 64 ல் சுசீலாநாயர் என்ற ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

1964- 66 வரை லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசில் ஒரே பெண்மணி சுசீலாநாயர் மீண்டும் அமைச்சரானார். 1966- 67 ல் இந்திரா தலைமையிலான அரசில் ஒருவர் பெண் அமைச்சர்.

1967- 71, 1971- 77, 1980- 84 ஆகிய காங்கிரஸ் ஆட்சியில் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். ராஜிவ் பிரதமரான 1984- 89 ல் மோசினா என்ற ஒருவரே அமைச்சராக இருந்தார்.

ஆனால் பா.ஜ., ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6 பேருக்கு காபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. காபினட் அமைச்சர்கள் குழுவில் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மோடி பெண்களுக்கு அளிக்கும் மதிப்பை காட்டுகிறது. இவ்வாறு சுஷ்மா கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)