ஒருமுறை கூட காங்., வெல்லாத தொகுதி

புதுடில்லி : முதல் லோக்சபா தேர்தல் தொடங்கி தற்போது வரை ஒருமுறை கூட காங்., ஆல் வெல்ல முடியாத லோக்சபா தொகுதி ஒன்று உள்ளது தேர்தல் கமிஷனின் தேர்தல் புள்ளி விபர பட்டியலில் தெரிய வந்துள்ளது. நாட்டின் முதல் லோக்சபா தேர்தல் 1951 ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 26 ஆண்டுகள் காங்., தான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. 1977 ம் ஆண்டு முதல் முறையாக காங்., அல்லாத ஆட்சி அமைந்தது. இருப்பினும் ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்தது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்., தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 1990 களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்., ஆட்சியே நடந்தது. பழமையான கட்சி என்று காங்., தன்னை கூறிக் கொண்டாலும், இதுவரை ஒருமுறை கூட காங்கிரசால் கைப்பற்ற முடியாத தொகுதியாக கேரள மாநிலம் பொன்னானி தொகுதி உள்ளது.கடலோரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் மற்றும் லோக்சபா தொகுதியான பொன்னானி, மசாலா பொருட்களுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் புகழ்பெற்றது. 60 சதவீதத்திற்கு அதிகமான முஸ்லீம்கள் வசிக்கும் இந்த தொகுதியில் 1951 முதல் 2014 வரை ஒருமுறை கூட காங்., வெற்றி பெற்றதில்லை. கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சி ஒரு முறையும், இடதுசாரிகள் 3 முறையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்., போட்டியிட்ட தேர்தலிலும் இந்த தொகுதியில் காங்., வெற்றி பெறவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் இந்த முறையும் காங்.,கிற்கு வெற்றி வாய்ப்பில்லை.கேரளாவின் பொன்னானி மட்டுமல்ல மேற்குவங்கத்தின் ஹூக்ளி, ஒடிசாவின் கேந்திரபரா ஆகிய தொகுதிகளும் காங்கிரசால் வெற்றி பெற முடியாத தொகுதிகளாக உள்ளன. கேந்திரபிரதாவில் 1951 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த தொகுதியில் வெற்றி என்பது காங்.,கிற்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது. இந்த தொகுதியில் ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாய்ப்பளித்து வருகிறார்கள்.
ஹூக்ளி தொகுதியிலும் முதல் தேர்தலில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. அதன் பிறகு இடதுசாரிகள் மட்டுமே இந்த தொகுதியில் வலுவான கட்சிகளாக இருந்து வருகின்றன. முன்னாள் பிரதமர் இந்திராவின் படுகொலைக்கு பிறகு ஹூக்ளியில் 50.49 சதவீதமாக இருந்த காங்.,கின் ஓட்டு சதவீதம், 2014 தேர்தலில் 3.13 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)