ராகுல், லாலுவுக்கு சொத்து வந்தது எப்படி?: மோடி

பளிகஞ்ச்: காங்கிரசின் எஜமானர் குடும்பத்திற்கும், பீகாரில் உள்ள ஊழல் குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து எங்கிருந்து வந்தது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். பீகாரின் பளிகஞ்ச் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, காங்.,கின் எஜமானர் குடும்பம் மற்றும் பீகாரின் ஊழல் குடும்பத்திற்கும் தற்போது ஆயிரம் கோடிகளில் சொத்து உள்ளது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இவர்கள் நாட்டை பற்றியும், ஏழைகளை பற்றியும் சிறிதாவது அக்கறை காட்டியதுண்டா? அவர்களின் கவனம் முழுவதும் ஊழல் செய்வதில் தான் உள்ளது.
மிக உயரத்தில் வசிக்கும் அவர்களால் ஏழைகளின் வலியை காண முடியாது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை இழந்தவர்களை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது கூட எப்படி கொள்ளையடிக்கலாம் என்று தான் அவர்கள் கண்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். அவர்களை சோலார் மின்சாரம் வழங்குபவர்களாக மாற்றவும் முடிவு செய்துள்ளோம்.விவசாய பண்ணைகள் உணவு உற்பத்தி செய்வதற்காக மட்டுமின்றி சூரிய ஒளி மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும். இதற்கான பணிகளை எங்கள் அரசு ஏற்கனவே துவக்கி விட்டது. பீகாரில் இது எனது கடைசி பிரசார பொதுக் கூட்டம். 2019 தேர்தலில் உங்களின் ஆசிகளை பெற எனக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு இது. நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு மீண்டும் பிரதமர் பதவி கொடுத்த பிறகு அதிக அளவிலான வளர்ச்சி திட்டங்களுடன் திரும்பி வருவேன் என்றார்.


J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-மே-2019 03:58 Report Abuse
J.V. Iyer நல்ல கேள்வி கேட்டீர்கள். இவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? சொத்துக்களை எப்போது மீட்பீர்கள்? அப்படியே 2G கொள்ளையர்களை உடனே கவனியுங்கள்.
sahayadhas - chennai,இந்தியா
16-மே-2019 00:02 Report Abuse
sahayadhas இந்தியாவிற்கு அடையாளம் தந்ததே நேரு குடும்பம் பேச வந்துடானுங்க. வெட்கமில்லாம.
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
15-மே-2019 20:54 Report Abuse
Ramakrishnan Natesan ஐந்து வருடத்தில் உம்ம சொத்து இரு மடங்கு ஆனது எப்படி
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
15-மே-2019 20:09 Report Abuse
T M S GOVINDARAJAN ஒவ்வொரு இந்திய குடிமகனின் உண்மையான உழைப்பாளியின் ரத்தத்தை அட்டை போல் உறிஞ்சி குடித்து கொளுத்தவர்கள் தான் இந்தக் கேடுகெட்ட ஊழல்வாதி கயவர்கள் இவர்களையும் ஆதரிக்கிறது ஒரு வெட்கங்கெட்ட கூட்டம் அவர்கள் இவர்களை போன்று வாழ்பவர்கள் இவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் ஒரு முடிவு கிடைத்துவிடும் அதற்கு இறைவன் அருள்புரிவார் மீண்டும் மோடி பிரதமராக எனது வாழ்த்துக்கள்
rm -  ( Posted via: Dinamalar Android App )
15-மே-2019 19:17 Report Abuse
rm A reader in this forum claimed that he worked in railways one day worked in bank another day. He was in London took video of Priyanka house. His family in usa. He worked for election duty .As PM his party men also.
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
15-மே-2019 18:59 Report Abuse
தாண்டவக்கோன் //ராகுல், லாலுவுக்கு சொத்து வந்தது எப்படி?// ம்ம்ம்ம்...., ரஃபேல் ஊழலில் சம்பாதித்தார்கள்.
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-மே-2019 18:46 Report Abuse
Natarajan Ramanathan நேரு பரம்பரையே ஊழலில் வளர்ந்தது தான். நான் 1980 களில் பட்னாவில் வங்கி பணியில் இருந்தபோது லல்லு ஒரு பரம ஏழை என்று தெரியும். கிட்டத்தட்ட பிச்சை எடுத்த குடும்பம் அது.
raja - chennai,இந்தியா
15-மே-2019 18:43 Report Abuse
raja பரம்பரை சொத்து மோதிலால் நேரு பற்றி தெரியுமா நோக்கு... அந்த காலத்திலே அவர்கள் தான் எல்லாவற்றிற்கும் செலவு பண்ணி நாட்டை வளர்த்தி விட்டாங்கோ... அன்று இன்வெஸ்ட்மென்ட் ஆகையால் இன்னும் வளருதும்ம்ம் .. நோக்கு எப்படி ???
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-மே-2019 18:40 Report Abuse
ஆரூர் ரங் Balaih seer.. நீங்கள் சொல்லியிலுள்ள நேரு குடும்ப சொத்துக்கதை மிகப்பெரிய ரீல் என எப்போதோ நிருபிக்கப்பட்டுவிட்டது.  நேரு மரணத்துக்குப்பின் தனக்கு  தங்க  வீடில்லை   வாடகைக்கு வீடெடுத்து தங்க வசதியில்லை என காமராஜரிடம் இந்திரா அழுத்ததுதான் உண்மை. அப்போது பரிதாபப்பட்டு தகவல் ஒலிபரப்புத்துறை  மந்திரியாக்கி அரசு வீடு ஒதுக்கியது காமராஜருக்கே ஆபத்தாக முடிந்தது. இன்றும் சோனியா குடும்பத்தினர்  மூன்று தனித்தனி அரசு வீடுகளில்தான்  வசிக்கின்றனர்  பரம்பரை சொத்து இருந்தால் ஏன் இப்படி நமது வரிப்பணத்தில் ஓசி வாசம்? . லாலு சிறு வயது வறுமையை பலமுறை  கூறியுள்ளார். திருமண வயதின்போது   அவருக்கு பெரிய  சொத்துபத்து இல்லாததால்தான்  படிக்காத ராபிரியை திருமணம் செய்ததாக அவர் கட்சியினரே கூறுவார்.
Shroog - Mumbai ,இந்தியா
15-மே-2019 18:13 Report Abuse
Shroog மோடி ஒரு டீ கடைக்காரர் அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து வந்தது எப்படி. லட்சக்கணக்கில் உடை உடுக்கிறார். மோடி வைத்திருக்கும் பேனாவின் விலை என்ன. மக்கள் முட்டாள் என்று நினைக்கிறாரா இந்த மோடி?
மேலும் 22 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)