கமலை வெளுத்து வாங்கும் பா.ஜ., தலைவர்கள்

சென்னை : ஹிந்துக்கள் குறித்து கமலின் சர்ச்சை பேச்சுக்கு தமிழக பா.ஜ., தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கமலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கமலின் சர்ச்சை பேச்சு குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, கமல் தான் பேசியது தவறு என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கமலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சில அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது. காந்தியின் கொள்ளுப் பேரன் என தன்னை சொல்லிக் கொள்ளும் கமல், மத வேறுபாட்டை உருவாக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். நாட்டை விட்டு வெளியேற போவதாக மிரட்டியவர் தான் இந்த கமல். தான் அரசியல்வாதி என்பதில் கூட நம்பிக்கை இல்லாதவர் அவர். அவர் தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார்.


கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல் ஆன்டி இந்தியன் அல்ல. ஆன்டி மனிதகுலம். ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதற்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டாவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்ததை விட கடுமையான எதிர்ப்பு எழும்பும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)