கமல் தவறாக பேசவில்லை: மக்கள் நீதி மையம் விளக்கம்

சென்னை : கமல் தவறாக பேசவில்லை. அவரது பேச்சு ஹிந்து விரோத பேச்சு சாயம் பூசப்பட்டுள்ளது என கமலின் மக்கள் நீதி மையம் கட்சி விளக்கம் அளித்துள்ளது.


சமீபத்தில் கரூரில் பிரசாரத்தின் போது பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் கமல் பேசியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட பலரும் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்ததால் கமல் 2 நாட்களாக பிரசாரங்களை ரத்து செய்தார்.


இந்நிலையில் கமலின் பேச்சு தொடர்பாக அவரின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மத சகிப்புதன்மை வேண்டும் என்றே கமல் பேசினார். அனைத்து மதக்குழுக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், மதத்தில் எந்த வடிவிலும் பயங்கரவாதம் இருப்பதற்கு கண்டனமும் தான் தெரிவித்தார்.


கமலின் இந்த கருத்துக்கள் முற்றிலும் மாற்றி கூறப்பட்டுள்ளது. கொடூர எண்ணத்துடன் அவரது பேச்சிற்கு ஹிந்து விரோத சாயம் பூசப்பட்டுள்ளது. இது சாமானிய மக்கள் பலரிடமும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பெரிய சதித்திட்டத்திற்கு தொடர்பில்லாத சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)