திருப்பரங்குன்றத்தில் இன்று கமல் பிரசாரம்

திருப்பரங்குன்றம் : கரூரில் பிரசாரத்தின் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கோட்சேவை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கமல் பிரசாரங்களை ரத்து செய்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு திட்டமிட்டபடி திருப்பரங்குன்றத்தில் கமல் பிரசாரத்தை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் தங்கி இருக்கும் கமல், அங்கிருந்து மதுரை புறப்பட்டுச் சென்றுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)