'மோடி கோஷம்'; வாழ்த்திய பிரியங்கா

இந்தூர்: 'மோடி.. மோடி..' என பா.ஜ.,வுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு, காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா, ம.பி., மாநிலம் இந்தூரில் சாலை பிரசாரம் செய்தார். பின் விமான நிலையம் நோக்கி அவரது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் மற்றொரு காரில் ம.பி., முதல்வர் கமல்நாத், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த, சிலர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக, 'மோடி.. மோடி..' என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து தனது வாகனத்தை உடனடியாக நிறுத்திய பிரியங்கா, காரை விட்டு இறங்கி கோஷம் எழுப்பியவர்களை நோக்கி சென்றார். இதனை எதிர்பார்க்காத பாதுகாப்பு அலுவலர்களும் உடன் சென்றனர். 'மோடி கோஷம்' எழுப்பிய பா.ஜ., ஆதரவாளர்களிடம், நீங்கள் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள்; நான் என் வழியில் பயணிக்கிறேன்' எனக்கூறி அவர்களுக்கு, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று(மே 13), போபால் நேரு மைதானத்தில் நடந்த பிரசாரத்தின் போது, தடுப்பு கட்டைகளை தாவி குதித்த பிரியங்கா, அங்கிருந்த பெண்களை சந்தித்து பேசிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)