கோல்கட்டாவில் அமித் ஷா பிரசாரத்தில் பா.ஜ., - திரிணமுல் மோதல்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா பங்கேற்ற பேரணியில் வன்முறை வெடித்ததால், பதற்றம் நிலவுகிறது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஆறு கட்ட தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில், கடைசி கட்ட தேர்தல், வரும், 19ல் நடக்கிறது. இதையொட்டி, கோல்கட்டாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணி, நேற்று நடந்தது. இதில், ஏராளமான, பா.ஜ., வினர் ஊர்வலமாக சென்றனர்.
ஹிந்து கடவுள் ராமர் மற்றும் அனுமன் வேடமணிந்தும், காவி உடை அணிந்தும் சென்ற, பா.ஜ., தொண்டர்கள், 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என, கோஷமிட்டனர். அப்போது, கல்லுாரி ஒன்றின் அருகில் நின்றிருந்த, திரிணமுல் கட்சி மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர், அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து, பேரணியில் சென்றவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர், கற்களை வீசி தாக்கினர். கல்லுாரிக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது.
இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போலீசார், கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக, இரு தரப்பிலும் சிலரை, போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், கோல்கட்டாவில் பதற்றம் நிலவுகிறது.

தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்:இந்நிலையில், தாக்குதல் குறித்து அமித் ஷா தெரிவித்துள்ளதாவது: கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., சாலை பிரசாரத்தில், திரிணமுல் கட்சியினர் தாக்குல் நடத்தினர். இருப்பினும், திட்டமிட்டபடியே, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பிரசாரத்தை நடத்தி முடித்திய பா.ஜ., தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திட்டமிட்டு தாக்குதல் நடத்திய திரிணமுல் கட்சியினருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., புகார்:இந்நிலையில், கோல்கட்டா தாக்குதல் சம்பவம் குறித்து, தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., புகார் அளிக்க முடிவு செய்துள்ளது. பா.ஜ., சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, அனில் பலூனி உள்ளிட்டோர் புகார் அளிக்க உள்ளனர். இந்நிலையில் முதல்வர் மம்தா, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)