தமிழிசைக்கு தாக்கம் அல்ல தாகம்; ஸ்டாலின்

சென்னை: 3 வது அணி அமைக்கும் யூகங்களின் அடிப்படையில் எழுந்து வரும் பல்வேறு கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதில் அளிக்கையில் பா.ஜ., தலைவர் தமிழிசை மீது நக்கலாக சாடினார்.

3 வது அணி வருமா ?சென்னையில் ஸ்டாலின் இன்று காலையில் நிருபர்களிடம் பேசுகையில்: தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு செல்லும் வழியில் என்னை சந்திக்க வந்தார். இது ஒரு மரியாதை நிமித்தமானது தான். 3 வது அணி அமைப்பதற்காக வரவில்லை. 3 வது அணி வருமா என்பது எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணி முடிவு வந்த பிறகுதான் 3வது அணி அமைவது குறித்து தெரியும் என்றார்.தொடர்ந்து சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து பா.ஜ., தலைவர் தமிழிசை , இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, ஸ்டாலின் " இது அவருக்கு தாகத்தை ஏற்படுத்தியுள்ளது " என பதில் அளித்தார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)