ஆரா தொகுதியில் மீண்டும் ஆர்.கே.சிங்?

மொத்தம், 40 தொகுதிகளை உடைய பீஹார் மாநிலத்தில், ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. இறுதிகட்டமாக, வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், ஆரா தொகுதியில், பா.ஜ.,வின் தற்போதைய, எம்.பி., - ஆர்.கே.சிங், மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து, பிரபலமான வேட்பாளர்கள் யாரும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான, சி.பி.ஐ., - எம்.எல்., சார்பில், ராஜு யாதவ் நிற்கிறார். இவர், கடந்த தேர்தலில், ஆர்.கே.சிங்கை எதிர்த்து போட்டியிட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று தோற்றார்.இந்த தொகுதியில், ஆர்.கே.சிங் தான் வெற்றி பெறுவார் என, கூறப்படுகிறது. எனினும், அவருக்கு, அவர் சார்ந்த, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியான, ஐக்கிய ஜனதா தளத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.ஏனெனில், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய உள்துறை செயலராக இருந்து, ஓய்வுபெற்றவர். பீஹாரை பூர்வீகமாக கொண்ட இவருக்கு சொந்த ஊர், இங்குள்ள கோசி; இவர் மனைவி தான், ஆராவைசேர்ந்தவர்.மாவட்ட கலெக்டராக இவர் இருந்த போது, 1990ல், பா.ஜ., நிறுவன தலைவர்களில் ஒருவரான, அத்வானி, பீஹாரில் ரத யாத்திரையாக வந்த போது, அவரை தடுத்து நிறுத்தி, கைது செய்ய உத்தரவிட்டவர். எனினும், பணி ஓய்வுபெற்றதும், பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார்.இதனால், பா.ஜ.,வின் அடி மட்டத் தொண்டர்களுக்கு, இவரை கண்டால் பிடிக்காது; இவருக்கு வேலை செய்ய மாட்டோம் என, உறுதியாக இருக்கின்றனர். இதை அறிந்த, ஆளும் ஐக்கிய ஜனதாதளம், தங்களுக்கு தான், இந்த தொகுதியை, பா.ஜ., வழங்கும் என, எதிர்பார்த்தது. ஆனால், பழையபடி, சிங்கே போட்டியிடுகிறார்.ஐக்கிய ஜனதாதளத்தில், ஆரா, 'சீட்' கிடைக்கும் என நம்பியிருந்த, முன்னாள், எம்.பி.,யும், ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த பெண் தலைவருமான, மீனா சிங், உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஆர்.கே.சிங்கை இந்த முறை வெற்றி பெற விடப் போவதில்லை என, சபதம் எடுத்துள்ளார்.இதை அறிந்த, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான, நிதிஷ்குமார், சமீபத்தில், மீனா சிங்கை அழைத்து, சமரசம் செய்துள்ளார்.கட்சியினரை மதிக்காமல் நடத்தும், ஆர்.கே.சிங், தான் சார்ந்துள்ள, ஜாதியை நம்பி களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில், அவர் சார்ந்த, முன்னேறியஜாதியின் ஒரு பிரிவினர், பெரும்பான்மையாகஉள்ளனர்.அதுபோல, அவரை எதிர்க்கும், மெகா கூட்டணியின் வேட்பாளர், ராஜு யாதவுக்கு, யாதவர்கள், முஸ்லிம்கள், குஷ்வாஹா ஜாதியினர் ஓட்டுகள் கிடைக்கும் என, நம்பப்படுகிறது.- கன்ஹையா பெலாரி -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)