திரிணமுல் காங்., பிரசாரத்தில் 'டைம்' பத்திரிகையின் கட்டுரை

அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகை, சமீபத்தில், நம் பிரதமர் மோடி குறித்து வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு, 'இந்தியாவின் பிரிவினைவாதி' என்ற ரீதியில் இருந்தது. இந்த தகவல் வெளியான நேரத்தில், ஆறாவது கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்திருந்தது. அதனால், டைம் பத்திரிகையில் வெளியான கட்டுரை, மேற்கு வங்கத்தில், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதற்கு சில காரணங்களும் உண்டு. தலைநகர் கோல்கட்டா தவிர்த்து, பிற பகுதிகளில், 'அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப்படி சொல்லியுள்ளது' என, பிரசாரம் செய்தால், அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். அதனால், வரும், 19ல், கோல்கட்டா மற்றும் அதை சுற்றியுள்ள, ஒன்பது தொகுதிகளுக்கு நடக்கவுள்ள இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில், அந்த விவகாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளது, ஆளும் திரிணமுல் காங்கிரஸ்.

எனினும், முதலாளித்துவ நாடான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் கட்டுரைக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் மதிப்பளிக்கவில்லை. ஆனால், திரிணமுல் காங்கிரசார், அதையே முக்கிய பிரசார ஆயுதமாக மாற்றியுள்ளனர். 'அமெரிக்காவின் மிகச் சிறந்த பத்திரிகையே, மோடி குறித்து, இப்படி சொல்கிறது பாருங்கள். நம் முதல்வர், மம்தா இதைத் தான், பல ஆண்டுகளாக கூறி வருகிறார். அவர் போலவே, அமெரிக்க பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளதை கவனியுங்கள்' என, பிரசாரம் செய்கின்றனர்.

கோல்கட்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள, படித்த மக்கள் நிறைந்த தொகுதிகளில், திரிணமுல் காங்கிரசின், இந்த பிரசாரம் கொஞ்சம் எடுபட்டு உள்ளது.ஆனால், அதற்கு பதிலடியாக, பா.ஜ.,வினர், 'சில ஆண்டுகளுக்கு முன், முதல்வர் மம்தா குறித்து, பல நாடுகளில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, 'முதல்வர் அல்ல; சேட்டைக்காரர்' என, செய்தி வெளியிட்டதை சுட்டிக் காட்டி, அதனால், 'டைம்' பத்திரிகைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்' என, பிரசாரம் செய்கின்றனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)