பெண்களை மதிக்காதவர் மோடி: மாயாவதி

லக்னோ: மோடி பெண்களை மதிக்காதவர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிரதமர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாயாவதியின் பேச்சிற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆல்வார் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக மாயாவதி முதலை கண்ணீர் வடிப்பதாகவும், இந்த விவகாரத்தை அவர் பெரிதாக நினைத்தால் எப்படி காங்., உடன் கூட்டணி சேர்வார் என்றும் பிரசாரத்தின் போது நேற்று பிரதமர் மோடி பேசி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மாயாவதி சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பா.ஜ.,வில் உள்ள திருமணமான பெண்கள் தங்களின் கணவர்கள் மோடியை சந்தித்தால், தங்களின் கணவரும் மோடியை போல் மனைவியை தனியாக தவிக்க விட்டு சென்று விடுவார்களோ என பயப்படுகிறார்கள்.ஆல்வார் பாலியல் பலாத்கார விவகாரத்தில் அமைதி காப்பதன் மூலம் மோடி இந்த விவகாரத்தை வைத்து மோசமான அரசியல் செய்ய முயற்சிக்கிறார். இதை வைத்து இந்த தேர்தலில் அவரது கட்சி பயனடைய பார்க்கிறது. இது வெட்கக் கேடானது. தனது அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மனைவியை பிரிந்தவர் எப்படி மற்றவர்களின் சகோதரிகள் மற்றும் மனைவிகளை மதிப்பார்? தலித்களின் ஓட்டுக்களை கவர அவர்கள் மீது போலியாக அன்பு இருப்பது போல் மோடி காட்டிக் கொள்கிறார். ஆனால் ரோஹித் வெமுலா, உனா, ஷபிர்புர் போன்ற சம்பவங்களை தலித்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.மாயாவதியின் இந்த பேச்சுக்கு பதிலளித்த ஒடிசாவின் புரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் சம்பித் பத்ரா, மாயாவதியின் பேச்சை டிவி.,யில் கேட்டேன். பிரதமர் மோடி குறித்து மாயாவதி பேசி உள்ளது வேதனைக்குரியது. மோடி மீது எத்தகைய காழ்புணர்ச்சி உள்ளது? இது எத்தகைய மனநிலை என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். மாயாவதி அவரது குடும்பத்தை பெரிதாக நினைப்பவர். ஆனால் பிரதமர் மோடியோ குடும்பத்தை விட நாட்டை பெரிதாக நினைப்பவர். நாடே தனது குடும்பம் என இருப்பவர் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)