தனக்கே ஓட்டுப் போடாத திக்விஜய் சிங்

போபால் : போபால் லோக்சபா தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் திக்விஜய் சிங், ஓட்டுப் போடாமல் தவிர்த்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ம.பி.,யின் போபால் தொகுதியில் காங்., சார்பில் திக்விஜய் சிங்கும், அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரக்யா தாக்கூரும் போட்டியிடுகின்றனர். ராஜ்கர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற திக்விஜய் சிங்கிற்கு, ராஜ்கர் பகுதியில் ஓட்டு உள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற 6 ம் கட்ட லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்காமல், நாள் முழுவதும் போபாலிலேயே இருந்தார் திக்விஜய் சிங்.ராஜ்கர் தொகுதிக்கு செல்ல பயந்து தான் திக்விஜய் சிங், தனக்கே ஓட்டளிக்க கூட செல்லாமல் போபாலிலேயே இருந்து விட்டார். 2 முறை முதல்வராக இருந்தவர் பிரக்யா தாக்கூரின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக பா.ஜ., வின் அமித் மாலவி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி உள்ளார்.இது குறித்து திக்விஜய் சிங்கிடம் கேட்ட போது, போபாலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றதால் அதை கவனிப்பதில் பிசியாக இருந்ததால் ஓட்டுப் போட என்னால் செல்ல முடியவில்லை. பா.ஜ., சொல்வது போல் எனக்கு பயம் என்பது கிடையவே கிடையாது. தொகுதியில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலை போல் இதிலும் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள். 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)