அன்புக்கு வெற்றி கிடைக்கும்: ராகுல் நம்பிக்கை

புதுடில்லி:சோனியா, அவரது மகன் ராகுல், மகள்பிரியங்கா ஆகியோர், டில்லியில் நேற்றுஓட்டளித்தனர்.




லோக்சபா பொதுத் தேர்தலில், ஆறாவதுகட்டமாக, டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.காங்., மூத்த தலைவர் சோனியா, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்துடன், ஓட்டளிக்க வந்தார். நிர்மான் பவனில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், அவர்கள் ஓட்டளித்தனர்.
சோனியாவின் மகனும், காங்., தலைவருமான ராகுல், அவுரங்கபாத் தெருவில் உள்ள, என்.பி., பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.


பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்த தேர்தலில்,காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்த லில், பிரதமர் மோடி, வெறுப்பை பயன்படுத்தினார்; ஆனால், பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், அன்பை பயன்படுத்தியது. இந்த போட்டியில், அன்பு வெற்றி பெறப் போகிறது.இந்த தேர்தலில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் நிலை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., ஊழல் மற்றும் ரபேல் ஆகிய முக்கிய பிரச்னைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை,எங்களின் சொந்த பிரச்னைகள் அல்ல; மக்களின் பிரச்னைகள். இவ்வாறு, ராகுல் கூறினார்.


ராகுலின் சகோதரிபிரியங்கா, அவரது கணவர், ராபர்ட் வாத்ரா ஆகியோர், லோதி எஸ்டேட் பகுதியில், சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.


பின், பிரியங்கா கூறியதாவது:மக்கள் கோபத்திலும், இயலாமையிலும் உள்ளனர். ஆனால், மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு மாற்றாக, பிரதமர்மோடி, மற்ற விஷயங்களை முன்வைத்து பிரசாரம் செய்தார்.இதனால், தங்களின் கோபத்தை, ஓட்டு மூலம் மக்கள் வெளிப்படுத்த உள்ளனர். எனவே, இந்த தேர்தலில் பா.ஜ., தோல்வியை சந்திக்கப் போவது தெளிவாகத் தெரிகிறது.இவ்வாறு, பிரியங்கா கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)