'வரும், 23க்கு பின் நல்லரசு அமைப்போம்': தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'வரும், 23ம் தேதிக்கு பின், மத்தியிலும், மாநிலத்திலும் நல்லரசை அமைப்போம்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




கட்சி தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:நாட்டின் அனைத்து மாநிலங்களும், மத்தியில் உள்ள ஆட்சி சாய்வதை எதிர்பார்க்கின்றன. தமிழக மக்களும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே, இடைத்தேர்தல் நடந்த, 18 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., படுதோல்வி
பயத்தை உணர்ந்துள்ளது.வரும், 19ம் தேதி நடக்கவுள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆட்சிக்கான முடிவுரை எழுதப்பட உள்ளது. ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கு, தேர்தல் ஆணையம், 'சவுகிதார்'ஆகிவிடக் கூடாது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள், என்ன தந்திரங்கள் செய்தாலும், ஏமாற்றமே மிஞ்சும் என்பதை, தேர்தல் ஓட்டுப்பதிவுகள் தெளிவாக காட்டுகின்றன.


கோடை காலத்தில், மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்க, யோக்கியதை இல்லாத ஆட்சி, பெயருக்கு நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகள், உயிர் இன்றி, செயல் இழந்து கிடக்கின்றன. விலை கொடுத்து ஓட்டுகளை வாங்கி விடலாம் என்ற, நயவஞ்சகஆட்சியாளர்களை நம்ப, தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு தொகுதிகளிலும், தொண்டர்கள் கண் இமைக்காமல், கடமையாற்ற வேண்டும். ஓட்டு சேகரிப்புக்கான எந்த வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.



நம்மை வெற்றி பெறச் செய்ய, மக்கள் ஆயத்தமாக இருக்கின்றனர்; மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில், நாம் முனைப்பாக செயலாற்ற வேண்டும்.ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும், நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தலில், வெற்றிக்கான முத்திரையை பதிப்போம். வரும், 23ம் தேதிக்கு பின், மத்தியிலும், மாநிலத்திலும், மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)