திருப்பரங்குன்றத்தில் முதல்வர் இன்று பிரசாரம்

சென்னை:முதல்வர், இ.பி.எஸ்., திருப்பரங்குன்றம் தொகுதியில், இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.



தமிழகத்தில், சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 19ல், இடைத்தேர்தல் நடக்க உள்ளது.


பொதுக்கூட்டம்




அந்த தொகுதிகளில், முதல்வர், இ.பி.எஸ்., இம்மாதம், 1ம் தேதியிலிருந்து, பிரசாரம் செய்து வருகிறார்.இன்று மாலை, திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, நாகமலை, புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம், ஆர்.வி.பட்டி, நிலையூர் கைத்தறி நகர் ஆகிய இடங்களில், பிரசாரம் செய்ய உள்ளார்.



இரவு, 8:45 மணிக்கு, திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை ஒட்டப்பிடாரம், நாளை மறுநாள் அரவக்குறிச்சி, 14ம் தேதி சூலுார் சட்டசபை தொகுதிகளில், பிரசாரம் செய்ய உள்ளார்.நான்கு சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நடிகை விந்தியா, நாளை முதல், பிரசாரம் செய்ய உள்ளார்.



சூலுார்




நாளை திருப்பரங்குன்றம், நாளை மறுதினம் ஒட்டப்பிடாரம், 14ம் தேதி மீண்டும் திருப்பரங்குன்றம், 15ம் தேதி சூலுார், 16, 17ம் தேதிகளில் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், பிரசாரம் செய்ய உள்ளார்.திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில், தலா, எட்டு இடங்களிலும், மற்ற தொகுதிகளில், தலா, நான்கு இடங்களிலும் பிரசாரம் செய்கிறார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)