மீனாட்சி - அஜய் - கோயல் புதுடில்லியில் பலத்த போட்டி

புதுடில்லி லோக்சபா தொகுதியில் தான், பார்லிமென்ட், சுப்ரீம் கோர்ட், மத்திய அமைச்சகங்கள், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் இல்லங்கள், ராணுவ தளபதிகளின் அலுவலகங்கள், பிரபலமான வர்த்தகர்கள் வசிக்கின்றனர்.டில்லியில் உள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளில், இது தான், உயர் வகுப்பினர் என கருதப்படும் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள் அதிகமானோரை கொண்டது. அதனால், சுத்தம், சுகாதாரம், வழுவழு சாலைகள், வானுயர்ந்த கட்டடங்கள் இங்கு அதிகம்.பா.ஜ., தலைவர்கள், வாஜ்பாய், அத்வானி, பாலிவுட் நட்சத்திரம், ராஜேஷ் கன்னா போன்றோர், இந்த தொகுதியின், எம்.பி.,யாக இருந்துள்ளனர்.
இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தேசிய அளவில் பேசப்படுவது வழக்கம்.இப்போது இங்கு, காங்., - பா.ஜ., - ஆம் ஆத்மி என, மும்முனைப் போட்டி நிலவுகிறது. பா.ஜ.,வின் மீனாட்சி லேகி, 51; காங்கிரஸ் மூத்த தலைவர், அஜய் மேக்கன், 56; ஆம் ஆத்மியின், பிரிஜேஷ் கோயல், 43, போட்டியிடுகின்றனர்.அரசியல் பின்புலத்தையும், பலத்தையும் பார்த்தால், மீனாட்சி லேகிக்கும், அஜய் மேக்கனுக்கும் அதிகம்; ஆம் ஆத்மியின் கோயலுக்கு, கம்மி தான். அதற்காக அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என, கூறி விட முடியாது.சி.டி.ஐ., எனப்படும், தொழில், வர்த்தக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளராக உள்ள அவர், வர்த்தகர்கள் மத்தியில் பிரபலம். மோட்டார் உதிரி பாகங்கள் வியாபாரத்தில் காலம் காலமாக ஈடுபட்டுள்ள குடும்பத்தை சேர்ந்தவர்.எனினும், பிரசாரத்திற்கு தெருக்களில் செல்லும் போது, யார் இவர் என்றே கேட்கப்படுகிறார். பா.ஜ., - காங்., வேட்பாளர்கள் போல இவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.
மீனாட்சி, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார். மோடியை, 'திருடன்' என, விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தலைவர், ராகுலை, உச்ச நீதிமன்றத்திற்கு இழுத்து வெற்றி கண்டவர். இந்த தொகுதியில், மீண்டும் போட்டியிடுகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)