திராவிடத்தை பழனிசாமி அரசு மறந்துவிட்டது

'திராவிடம்' என்ற சொல்லுக்கு, பெரியார் என, அழைக்கப்படும், ஈ.வெ.ராமசாமி அரசியல் அர்த்தம் கொடுத்தார். எனினும், அண்ணாதுரை தான், அந்த சொல்லை பிரசாரம் செய்து வழக்கப்படுத்தி வளர்த்தார். அண்ணாதுரை தான், திராவிடத்தை அரசியல் களத்திற்கும் கொண்டு வந்தார்.
திராவிட அரசியலின் முக்கிய சாதனைகள் - மொழி மற்றும் கலாசார அடையாளத்தை வலுப்படுத்தியது; முற்போக்கு சிந்தனையை பரப்பியது; சமூக நீதியை உறுதிப்படுத்தியது மற்றும் மாநில சுயாட்சியை நிலைநாட்டியது. இதை அண்ணாதுரை முதல், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை, அனைத்து திராவிட கழக தலைவர்களும் செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா தன் ஒவ்வொரு உரையின் போதும், அண்ணாவின் பெயரை குறிப்பிட தவறியதில்லை. அவர் ஒரு போதும், சாதி வேற்றுமையை கட்சியினரிடையே காட்டியதில்லை. கட்சியின் பொதுச் செயலராக பதவி ஏற்றபோதும், திராவிடம் என்ற கொள்கையை, அவர் முழு அர்த்தத்தில் கடைப்பிடித்தார்.

சாதிகள் அற்ற திராவிட சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்தார். இந்த அளவிலான உறுதிப்பாடும், ஆற்றலும் கொண்டிருந்ததால், திராவிட தத்துவத்தை நிலைநிறுத்துவதில், ஜெயலலிதா முக்கிய பங்காற்றினார்.

மத தீண்டாமை இல்லைஇந்த தலைவர்கள், திராவிட சிந்தனையில் இருந்து விலகாமல் இருந்ததால், தமிழ்நாடு மதச்சார்பற்ற, நல்லிணக்கம் நிலவும் மாநிலமாக இருந்தது. மதவேறுபாடுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. தமிழால் சமூகம் இணைந்திருந்தது. அதனால், தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழவில்லை; மத தீண்டாமை இல்லை. அதில், அரசியல்வாதிகள் புகுந்து விளையாடவும் இல்லை.

ஆனால், இ.பி.எஸ்., முதல்வரான பின், திராவிடம் தேக்கநிலையை அடைந்துள்ளது. ஏனெனில், திராவிடத்தை அச்சுறுத்தும், மூன்று சக்திகளை எதிர்த்து நிற்கும் வலிமை, இ.பி.எஸ்.,சுக்கு இல்லை. முதலாவது அச்சுறுத்தல், நவீனமாக்கல் நோக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள். இரண்டாவது அச்சுறுத்தல், பா.ஜ.,வின் ஹிந்துத்துவா. மூன்றாவது அச்சுறுத்தல், தமிழ் தேசியவாதம். தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள, இ.பி.எஸ்., மத்திய ஹிந்துத்துவா கட்சியின் அழுத்தத்தை ஏற்றுக் கொள்பவராக மாறிவிட்டார்.

அ.தி.மு.க.,வையும், தேசியவாத கருத்தின் பக்கம் நகர்த்தி விட்டார். தற்போதைய அரசும், அதன் அமைச்சர்களும், ஒரு பேச்சுக்கு கூட அண்ணா துரையின் பெயரை பயன்படுத்துவ தில்லை. பெரும்பாலான பேச்சுக்களில், பிரதமர் நரேந்திர மோடியை தான் புகழ்ந்து தள்ளுகின்றனர். முந்தைய தலைவர்கள், தமிழ்நாட்டை ஒரு வலுவான மாநிலமாக வைத்திருந்தனர். தற்போது, மாநில சுயாட்சி என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

இந்த ஆட்சி, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வந்த, மூன்று மொழி கொள்கைக்கு, 2019ல் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.பெருமளவு மக்களின் எதிர்ப்பை பெற்றிருந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை, மாநில அரசு வரவேற்றது. தமிழக வரலாற்றிலேயே, முதல் முறையாக பாதிக்கப்பட்ட, முஸ்லிம் சகோதரர்கள் வீதிக்கு வந்து போராடினர்.

தராசு முள்ளை திருப்ப வேண்டும்இது, திராவிட மண்ணாக இருந்ததால், அவர்களது போராட்டத்துக்கு, ஹிந்துக்களும் ஆதரவளித்தனர். இருப்பினும், அரசியல்வாதிகள் மதமாச்சரியங்களை ஏற்படுத்தும் வேலைகளை இங்கு துவங்கி விட்டனர். அண்மையில், பா.ஜ., நடத்திய வேல் யாத்திரை, முருகக் கடவுளை, தி.மு.க., தலைவர் தத்தெடுத்துக் கொண்ட தெல்லாம், திராவிடத்தில் இருந்து இந்த இயக்கங்கள் விலகியதையே காட்டுகின்றன. தற்போதைய நிலை, அ.தி.மு.க., ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதிலிருந்து மீள்வதற்கு, இரண்டு வழிகள் தான் உள்ளன.1தொலைநோக்கு பார்வையோடு, மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தி, சமூக பொருளாதார நிலையை நவீனப்படுத்துதல். அதற்கு தேவையானது நல்ல நிர்வாகம் தரும், தமிழ் திராவிட அரசியல் என்பதை ஏற்பது.2புதுடில்லியில் தயாரிக்கப்படும், நவீன தாராளமய சந்தை பொருளாதாரம் மற்றும் ஹிந்துத்துவாவை ஏற்பது. ஆக அடுத்த மாதம், நமக்கு ஒரு முக்கியமான பணி காத்திருக்கிறது.

பிராந்திய சக்திகளுக்கு ஆட்சி தரும் மாநில சுயாட்சி மற்றும் திராவிட அரசியலின் பால், நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவது என்ற திசையில், தராசு முள்ளை திருப்ப வேண்டும். அப்போது தான், இந்த நுாற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு, தமிழ்நாட்டை உயர்த்த முடியும்.

- கே.சி.பழனிசாமி அ.தி.மு.க., - - முன்னாள் எம்.பி.,


R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
10-மார்-2021 09:17 Report Abuse
R D Moorthy திருட்டு முன்னேற்ற கழகம் ஒழிந்தாலே போதும் தமிழகம் வளர்ச்சி பெரும்
Malarvizhi - Hyderabad,இந்தியா
09-மார்-2021 17:33 Report Abuse
Malarvizhi இது போன்ற கட்டுரைகளெல்லாம் 1970-களில் தமிழனின் மனத்தை சுண்டி இழுத்தன.பின்னர் காலம் செல்ல செல்ல இது போன்ற கட்டுரைகளை தமிழன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமிழன் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறான். தமிழனின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறிக்கொள்பவர்கள், மதுவிலக்கையல்லவா தீவிரமாக அமுல் படுத்தியிருக்கவேண்டும்?
SUNDAR - chennai,இந்தியா
09-மார்-2021 17:32 Report Abuse
SUNDAR இவனை அதிமுக விலிருந்து தூக்கி வெளியே போட்டது சரிதான்.
skandh - Chennai,இந்தியா
11-மார்-2021 16:23Report Abuse
skandhஇந்தாள் ZOOM இல் மீட்டிங் நடத்திக்கொண்டுள்ளான். மத்தவர்களை முட்டாளென்று நினைக்கின்றான்....
Endrum Indian - Kolkata,இந்தியா
09-மார்-2021 16:54 Report Abuse
Endrum Indian திராவிஷத்தை மறப்பது நல்லது தானே
Ramar - Madurai,இந்தியா
09-மார்-2021 15:18 Report Abuse
Ramar இந்தமாதிரி பிரித்து பார்ப்பவன்தான் மிகப்பெரிய கொடூரன் . அனைவருக்குமே வீடு என்ற திட்டத்தை தந்தது பாஜக. இது தவிர ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதும் இவர்கள் தான். மத்திய அரசை சாராத கட்சி தமிழ்நாட்டுக்கு வந்தால் கண்டிப்பாக முன்னேற்றம் இருக்காது.
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
09-மார்-2021 14:35 Report Abuse
கல்யாணராமன் சு. \\பெருமளவு மக்களின் எதிர்ப்பை பெற்றிருந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை, மாநில அரசு வரவேற்றது. தமிழக வரலாற்றிலேயே, முதல் முறையாக பாதிக்கப்பட்ட, முஸ்லிம் சகோதரர்கள் வீதிக்கு வந்து போராடினர். ......\\ . இது என்ன புது கதை விடறார் ? ...... இவருடைய "sell by date" முடிந்துவிட்டது ....... அதனால் கொள்ளையடித்த பணத்தை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைத்து மீதி நாட்களை கழித்தல் இவருக்கு நல்லது .........
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
09-மார்-2021 13:34 Report Abuse
திராவிஷ கிருமி தமிழரல்லாதோர் உருவாக்கிய ஒரு விஷமத்தனமான வார்த்தை மற்றும் பொய், புரட்டான கருத்தியல் தான் இந்த திராவிஷம் என்பது... திராவிஷம்... திராவிஷம் என்று கூறுபவர் எவருமே தமிழரல்ல... அல்லவே அல்ல...
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
09-மார்-2021 13:15 Report Abuse
R D Moorthy திராவிடம் என்பதே அயோக்கிய வேலை அதை ஏன் தூக்கி பிடிக்கணும் தூக்கி எரியனும் தமிழகத்தின் சாபக்கேடு திராவிடம்
Suppan - Mumbai,இந்தியா
09-மார்-2021 13:14 Report Abuse
Suppan கால்டுவெல்லின் திராவிடம் ஒரு பம்மாத்து வேலை. திராவிடநாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு அண்ணாதுரை கம்பரசம், ஓரிரவு போன்ற மஞ்சள் "இலக்கியங்களை" எழுதினார்.. அரசியலில் கேவலமான பேச்சுக்களை முன்னெடுத்து வைத்ததில் கருணாவுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழர்கள் இந்த மாதிரி ஆட்களை ஆதரித்ததற்கு வெட்கப் படவேண்டும்.திராவிடம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இவ்வளவு கட்சிகள் தமிழ்நாட்டை பல வருடங்களாக ஏமாற்றிவருகின்றன. அந்தப் பெயர் ஒழியும் நாள்தான் தமிழ் நாட்டுக்கு நன்னாள்.தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் கலப்பதுதான் நல்லது. இந்தப் புரட்டுவாதிகளைப் புறம் தள்ளுவோம்.
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
09-மார்-2021 16:40Report Abuse
திராவிஷ கிருமிதமிழ்நாட்டிற்கு நேர்ந்த ஒரு பெரும் சாபம் ......
anbu - London,யுனைடெட் கிங்டம்
09-மார்-2021 13:03 Report Abuse
anbu ஆரியம், திராவிடம் எல்லாம் மாயை அந்த புரட்டை அவிழ்த்து விட்டது மதம் மாற்றும் கூட்டம். மக்கள் இந்த மாயையில் இருந்து வெளியேறி வெகு காலம் ஆச்சு. போய் கொஞ்சம் தொல் காப்பியம் நிகண்டு திருக்குறள் படியுங்க. சொரியார் தமிழுக்கு என்ன செய்தார்? தமிழையும் தமிழரையும் இழிவு செய்தார்.
மேலும் 56 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)