'கெத்து' காட்றார் துரை

''துரை வரவு, காலத்தின் கட்டாயம்... உங்களுக்கு அனைத்து கதவுகளும் திறந்துள்ளன. புதுவெள்ளமாக நீங்கள் வருவது; வைகோ துணை நிற்பது வரவேற்கத்தக்கது. வாரிசு அரசியல் என்று வைகோ தயக்கம் கொள்ளத் தேவையில்லை...''

கோவை மாவட்டம், அன்னுார் நகர ம.தி.மு.க., பொறுப்பாளர் பொன்விழி, வார்த்தைகளால், வர்ணம் பூசி, கடிதமாக வழங்க, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ முகத்தில் புன்னகை பூக்கிறது.
திருப்பூரில், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற துரையுடன், கட்சியின் பாசக்கார நிர்வாகிகள், நீண்ட நேரம் அளவளாவினர்.

'வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா... உடல்நலத்தை ஆரோக்கியமா வச்சுக்குங்க' என்று பாசம் குழைய விசாரித்த, துரை, அவர்களுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டார்.அனைத்து வழிகளிலும் வரவேற்புக்கு 'பிளக்ஸ்' வைக்கப்பட்டு, கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. எட்டு கார்களில் கட்சியினர் புடைசூழ 'வாழ்க' கோஷத்துடன் பயணித்தார். ஒவ்வொரு இடத்திலும், 'இளம் தலைவர். எதிர்காலம் வந்து விட்டார்' என கூறி பட்டாசு, பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையின்போது, ''பொறுப்புக்கு வர நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் உண்மையுடன் தீவிரமாக கட்சி பணியாற்றினால், பொறுப்பு தானே தேடி வரும்,'' என்றார்.வாரிசு அரசியல், ம.தி.மு.க.,வில் இருக்கக்கூடாதா, என்ன!வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)