வேட்புமனு நிராகரிப்பு: தேஜ்பகதூர் மனு தள்ளுபடி

புதுடில்லி : இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் தேஜ் பகதுார். கடந்த 2017ல் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக இவர் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து, ராணுவ நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தேஜ் பகதுார் சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)