ராகுல் குடியுரிமை விவகாரம்: வழக்கு தள்ளுபடி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை பெற்றவர். இதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், ராகுலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில், ஜெய் பகவான் கோயல், சி.பி.தியாகி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய லோக்சபா தேர்தலில், காங்.,தலைவர் ராகுல், உத்தர பிரதேச மாநிலம், அமேதி, கேரள மாநிலம், வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஆனால், அவர், பிரிட்டன் குடியுரிமையும் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை, அவர், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ராகுலின் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இந்த மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று(மே 9) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என கூறுவதை ஏற்க முடியாது. இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)