மம்தாவின் கோபம் பற்றி கவலையில்லை: பிரதமர்

பங்குரா: என் மீது மம்தாவுக்கு ஏற்பட்டுள்ள கோபம் பற்றி கவலையில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: முதல்வர் மம்தா, மாநிலத்தின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார். மக்களை ஏமாற்றிவிட்டார் . என்னை விமர்சிக்க மம்தா பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்து அவருக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம் வெளிப்படையாக தெரிகிறது. முதல்வர் பதவியில் மட்டுமே அவரின் கவனம் உள்ளது.


போனி புயல் ஏற்பட்ட பின்னர் அவருடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன். ஆனால், மம்தாவுக்கு ஈகோ உள்ளது. பிரதமருடன் பேசுவது சரியாக இருக்கும் என அவர் சிந்திக்கவில்லை. இங்குள்ள அதிகாரிகளுடன் பேசி மாநிலத்திற்கு உதவ மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த மம்தா, அதற்கான கூட்டத்தை கூட்ட மறுத்துவிட்டார்.

என்னை பிரதமராக ஏற்க மாட்டேன் என மம்தா வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால், இம்ரான் கானை ஏற்க தயாராக உள்ளார். என் மீது அவருக்கு ஏற்பட்ட கோபம் பற்றி கவலையில்லை. எனக்கு 130 கோடி மக்களின் அன்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)