ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் விளக்கம் கேட்குது தி.மு.க.,

சென்னை, : ''அரசியல் கட்சிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்த பின்னரே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 'விவிபேட்' கருவிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,'' என, தலைமை தேர்தல் ஆணையருக்கு, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.அவரது புகார் கடிதம்:தேனி லோக்சபா, பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, எந்தவித தகவலும் தெரிவிக்காமல், கோவையில் இருந்து, 50 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் முடிந்து, பல நாட்கள் ஆகியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க., கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், இந்த நடவடிக்கைக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜன்டுகளுக்கு தகவல் தெரிவிக்காமல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்தது, முற்றிலும் தவறானது. மறு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது, வழக்கமான நடைமுறை தான் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, விளக்கம் அளித்துள்ளார்

.கோவையில் இருந்து ஈரோட்டிற்கு, 20 விவிபேட் எனும், ஓட்டுப்பதிவு உறுதி கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர் கூறி உள்ளார்.தேனி மற்றும் ஈரோட்டில், மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என, யாரும் வலியுறுத்தவில்லை. தி.மு.க., தரப்பில், தர்மபுரி உள்ளிட்ட, 10 இடங்களில் மறுஓட்டுப்பதிவு நடத்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத் தப்பட்டுள்ளது.யாரும் மறு ஓட்டுப்பதிவு கேட்காத இடங்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டது, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு, தேர்தல் ஆணையம், உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம், அதன் நம்பக தன்மையை இழந்து விடும்.இனிவரும் நாட்களில், அரசியல் கட்சிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்த பிறகே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை, இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.


Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மே-2019 08:47 Report Abuse
Srinivasan Kannaiya எல்லாம் கொஞ்ச நாளைக்குதான்.. தோற்றவன் கொஞ்சம் நாள் பொலம்புவான்... வென்றவன் கொஞ்சம் நாள் வெற்றி விழா கொண்டாடுவான்.. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் வாக்களித்த மக்களை எல்லோரும் மறந்துவிடுவார்கள்
oce - chennai,இந்தியா
09-மே-2019 07:07 Report Abuse
oce சென்னை, : ''அரசியல் கட்சிகளுக்கு முறையாக தகவல் தெரிவித்த பின்னரே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 'விவிபேட்' கருவிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,'' இது எந்த சட்டத்திலப்பா சொல்லி இருக்கு.
Bhaskaran - Chennai,இந்தியா
09-மே-2019 06:51 Report Abuse
Bhaskaran ஜனநாயகத்தி கேலிக்கூத்தாக ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது தேர்தல் அதிகாரிகள் செய்யும் இம்மாதிரி வேலைகளை அணைத்து நடு நிலையாளர்களும் கண்டிக்கணும்
oce - chennai,இந்தியா
09-மே-2019 06:50 Report Abuse
oce தேர்தல் ஆணையம் நம்பக தன்மை இழக்கும். இதை நீ சொல்ற. மற்ற கட்சிகள் சொல்லல. ஆளும் கட்சிக்கு மட்டும் நீ எதிர் கட்சி தேர்தல் ஆணயத்திற்கில்லை.
oce - chennai,இந்தியா
09-மே-2019 06:47 Report Abuse
oce வாக்களர்களாச்சு தேர்தல் கமிஷனாச்சு. நடுவுல இவனுங்க என்ன புகுந்து கொடையறானுங்க.
oce - chennai,இந்தியா
09-மே-2019 06:43 Report Abuse
oce திமுகவை கேட்டா தேர்தல் வச்சாங்க. நாலு கட்சிகளில் திமுக ஒரு கட்சி. அந்தந்த கட்சிக்காரன்கள் கம்முனு குந்திகினு இருக்கும்போது இவன்களுக்கு மட்டும் எங்க நோவுது.
blocked user - blocked,மயோட்
09-மே-2019 05:21 Report Abuse
blocked user கோமாளித்தனங்களுக்கு எல்லை இல்லாமல் போய் விட்டது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)