எல்லை தாண்டும் காங்., தலைவர்கள்: பிரதமர் மோடி

குருஷேத்ரா: என் மீது அன்பு செலுத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுகிறார். ஆனால், அக்கட்சியினர் என்னை விமர்சிப்பதில் நாகரீகத்தின் எல்லையை தாண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கேள்வி இல்லை



அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் என்னை ஹிட்லர், முசோலினி என விமர்சனம் செய்கின்றனர். மற்றவர்கள் மோசமாகவும், அநாகரீகமாகவும் விமர்சனம் செய்கின்றனர். இன்னும் சிலர் என்னை எலி, பாம்பு, நண்டு என்கின்றனர்.
சில நேரங்களில் என்னை விமர்சிப்பதில், காங்கிரசார் நாகரீகத்தில் எல்லையை தாண்டுகின்றனர். இது தான் அவர்களின் அகராதியில் அன்பிற்கான அர்த்தமாக தெரிகிறது. என்னை மோசமாக விமர்சிப்பதன் மூலம் எப்படி அன்பை வெளிப்படுத்துகின்றனர் என தெரிகிறது. காங்கிரசின் அரசியல் வாரிசு, அன்பிற்கான அர்த்தத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இது குறித்து ஒருவரும் கேள்வி எழுப்புவது கிடையாது. இதனால் தான், நான் இதனை மக்கள் முன் வைக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

விலகிய காங்.,



பதேபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தனது பாதுகாப்பு படையை பலப்படுத்தாமல், எந்த நாடாவது உலக சக்தியாக மாறுமா? பாதுகாப்பு குறித்து காங்கிரசோ, மகா கூட்டணியோ எப்போவாதாவது பேசியது உண்டா? அந்த துறையில் உள்ள அவர்களுக்கு உள்ள அனுபவம் காரணமாக எதுவும் பேச மாட்டார்கள் . பா.ஜ., கூட்டணியுடன் காங்., கூட்டணி மோதியது. எப்படியாவது ஆட்சி அமைத்து விட காங்கிரஸ் விரும்பியது. ஆனால், இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. 5 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், போட்டியில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டது.
தேர்தலில் வெற்றி பெற போவது முடியாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்து கொண்டு விட்டதால், 2 கட்ட தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டது. இதனால், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. மீண்டும் மோடி அரசு அமையும். மக்களுக்காக பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)