பிட்ரோடா கருத்தும் மோடி பதிலும்

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்திற்கு காங்., நிர்வாகிகளுள் ஒருவரும், காங்., தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்திற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். மே 4 ம் தேதியன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், ரபேல் விவகாரம் பற்றி காங்., தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருவது தொடர்பாக பேசினார். அப்போது, கட்சி விசுவாசிகளால் மிஸ்டர் கிளீன் என புகழப்படும் உங்கள் தந்தையின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதி என்றே முடிந்தது என்றார். மோடியின் இந்த பேச்சு பெய்யான கருத்து என டில்லி பல்கலை., ஆசிரியர்கள், தங்கள் கைப்பட கருத்து எழுதி, கையெழுத்திட்டருப்பதாக சாம் பிட்ரோவா தெரிவித்துள்ளார். மோடி பேச்சிற்கு எதிராக மிக நீண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து, அதற்கு கீழ் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆதரவு கையெழுத்திட்டுள்ளதாகவும் பிட்ரோடா குறிப்பிட்டுள்ளார்.பிட்ரோடா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு எதிராக தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட்டுள்ளது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை பற்றி அக்கறை கொள்கிறார்கள். யாரும் பேசக்கூடாது என்பது போன்ற சூழ்நிலை தற்போது இந்தியாவில் இருக்கும் போது இவர்கள் ஒன்றுபட்டு கருத்தை தெரிவித்துள்ளது என்னை கவர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் கையெழுத்திட்ட பட்டியலின் போட்டோக்கள் சிலவற்றையும் பிட்ரோடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் இதற்கு நவ்பாரத் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அதில், நான் கூறியதற்கு காங்., ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகிறது எனக்கு புரியவில்லை. தற்போதைய பிரதமர் பற்றி அவதூறாகவும், அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்து கிண்டல் செய்தும் காங்., தலைவர் கருத்து கூறி வருவதை பாராட்டி, வரவேற்பது காங்.,ன் இயல்பாகி உள்ளது. ஆனால், அவரது தந்தை பற்றி உண்மையாக நடந்ததை நான் கூறினால், காங்., தலைவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். ராஜிவ் ஊழல் செய்யவில்லை அல்லது அது பொய்யானது என ஒருவர் கூட கூறவில்லை. இது ஒன்றும் உள்ளாட்சி தேர்தல் இல்லை. தேசிய தேர்தல். பயங்கரவாத பிரச்னை நாட்டில் உள்ளது. பாக்., பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தால், அதற்கு காரணம் யார் என வெளிப்படையாக தெரியும் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)