அமமுக-திமுக கூட்டு வெளிப்பட்டுள்ளது

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, அமமுக - திமுக இடையே உறவு இருப்பதை தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு வெளிப்படுத்தி உள்ளது. தோல்வி பயத்தால் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்பதால் ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது. மே 23 க்கு பிறகு அவர்களால் கனவு கூட காண முடியாது. திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் துவங்குவதற்காக அடிக்கல் நாட்டப்பட உள்ளது. 304 தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகளால் 10 லட்சம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)