தேர்தல் சூதாட்ட சந்தையில் ரூ.12 ஆயிரம் கோடி புழக்கம்

ஆமதாபாத்: கிரிக்கெட் சூதாட்டம் போல, 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெறப்போகும் கூட்டணி எது' என்ற போட்டியில், 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சூதாட்ட பணம் புழங்குவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல், ஏப், 11ல் துவங்கி, வரும், 19 வரை, ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே, ஐந்து கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. இரண்டு கட்ட ஓட்டுப்பதிவு மட்டுமே மீதி உள்ளது. ஒருபுறம் அரசியல் கட்சி தலைவர்கள், பரபரப்பாக தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இன்னொருபுறம், 'ஆட்சி அமைக்கப் போகும் கூட்டணி எது' என, சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பந்தயம் கட்டி வருகின்றனர்.

இந்த சூதாட்ட களத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை புழங்குவதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, 185 - 220 சீட்டுகளும், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, 160 - 180 சீட்டுகள் வரை கிடைக்கும்' என, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு கூட்டணியிலும் இடம்பெறாத கட்சிகளுக்கு, கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்றும், இவர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பின், குதிரை பேரத்துக்கு இது வழிவகுக்கும் என்றும், அவர்கள் கூறினர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)