பதவி ஆசை எனக்கில்லை

கோவை : ''மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,யால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன் பேசினார். கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதியில் போட்டியிடும், அ.ம.மு.க., வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து, இருகூரில் தினகரன் பேசியதாவது:மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,வால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல. ஜெ., மறைவுக்கு பின், இ.பி.எஸ்.,சை முதல்வராக்கியது கட்சி. ஆனால், அதில், கலகம் விளைவிக்க நினைத்து, இ.பி.எஸ்.,சை எதிர்த்து, பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் ஓட்டளித்தனர்.

முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள, 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, இடைத்தேர்தல் நடக்க காரணமானவர், இ.பி.எஸ்., தான். தற்போது, தோல்வி பயத்தால், மேலும், மூன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினார். அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. துரோகம் இழைத்தவர்களுக்கு இடைத்தேர்தல் வாயிலாக, மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)