மே 23-க்குப்பின் சட்டசபை பொதுத்தேர்தல் வரும்

ஆண்டிபட்டி : ''மே 23-க்குப்பின் மீண்டும் சட்டசபை பொதுத்தேர்தல் வரும்.,'' என , அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.ஏப். 16-ல் ஆண்டிபட்டி அ.ம.மு.க.,தேர்தல் அலுவலகத்தில் ரூ. 1.48 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தேனி வழக்கறிஞர் செல்வம் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை சந்திக்க வந்த தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது : தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு அ.ம.மு.க., மீது வழக்கு போட்டுள்ளனர். உடல் நலம் இல்லை என்று கூறியும் வழக்கறிஞர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூன்று எம்.எல்.ஏ.,க்கள் மீதான சபாநாயகர் நடவடிக்கை தவறு என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எம்.எல்.ஏ.,பிரபு சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். அவர் மீது மட்டும் தனிப்பட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. என்ன அதிகாரம் செய்தாலும் அங்கு அ.ம.மு.க., வெற்றி பெறும். நாங்கள் 22 தொகுதிகளிலும் வெற்றி பெறத்தான் போகிறோம்.
தி.மு.க.,வுடன் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும். மே 23-க்குப்பின் மீண்டும் சட்டசபை பொதுத்தேர்தல்தான் வரும். அப்போது மீண்டும் நாங்கள் ஜெ., ஆட்சியைத்தான் அமைப்போம். தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை, என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)